அ.தி.மு.க. கூட்டணியில் எதிர்பார்த்த தொகுதிகள் கிடைத்துள்ளது.. பா.ஜ.க. தலைவர் எல்.முருகன்.!

அதிமுக கூட்டணியில் நாங்க எதிர்பார்த்த தொகுதிகள் கிடைத்துள்ளதாகவும், மத்திய அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களையும் சொல்லி வாக்கு கேட்போம் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Update: 2021-03-11 02:40 GMT

அதிமுக கூட்டணியில் நாங்க எதிர்பார்த்த தொகுதிகள் கிடைத்துள்ளதாகவும், மத்திய அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களையும் சொல்லி வாக்கு கேட்போம் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 20 தொகுதிகளின் பட்டியலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டனர்.


 



அதன்படி, திருவண்ணாமலை, நாகர்கோவில், குளச்சல், விளவன்கோடு, ராமநாதபுரம், மொடக்குறிச்சி, துறைமுகம், ஆயிரம் விளக்கு, திருக்கோயிலூர், திட்டக்குடி தனி தொகுதி, கோவை தெற்கு, விருதுநகர், அரவக்குறிச்சி, திருவையாறு, உதகமண்டலம், நெல்லை, தளி, காரைக்குடி, (தாராபுரம் தனி), மதுரை வடக்கு ஆகிய தொகுதிகள் பாரதிய ஜனதா கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தொகுதி குறித்து பேசிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், அதிமுக கூட்டணியில் நாங்க எதிர்பார்த்த தொகுதிகள் கிடைத்துள்ளது. கூட்டணி என்றால் சிலவற்றை விட்டுக்கொடுத்தல் இருக்கும்.


 



பாஜகவில் போட்டியிடுவதற்கு உரிய நபர்களுக்கு உரிய வாய்ப்பு வழங்கப்படும். தமிழகத்தை பொறுத்தவரையில் பாஜக பூத் கமிட்டி வலுவாக உள்ளது. மத்திய அரசு சாதனைகளை சொல்லி வாக்கு சேகரிப்போம். அதே நேரத்தில் தமிழகத்திற்கு தேசிய தலைவர்கள் பிரச்சாரம் செய்வார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Similar News