ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்றும் பாஜக.? பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி தொண்டர்கள் உற்சாகம்.!

ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்றும் பாஜக.? பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி தொண்டர்கள் உற்சாகம்.!

Update: 2020-12-04 10:30 GMT

தெலுங்கானா மாநிலத்தில் 150 வார்டுகளை கொண்ட ஐதராபாத் மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 1ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, பாஜக, காங்கிரஸ், அசாதுதீன் ஓவைசி உள்ளிட்ட பிற கட்சிகள் போட்டியிட்டது. எனினும், ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்ற ஆளுங்கட்சியான தெலுங்கானா ராஷ்டிர சமிதிக்கும், பாஜகவுக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.


இந்நிலையில், ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எல்பி மைதானத்தில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.


தெலுங்கானா ராஷ்டிர சமிதி 100க்கும் அதிகமான வார்டுகளை கைப்பற்றும் என எதிர்பார்ப்பதாக அக்கட்சியின் தலைவர் கே.கவிதா தெரிவித்திருந்தார். ஆனால் பாஜக தற்போது 72 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது.


இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் பாஜகவின் முதலமைச்சர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தெலங்கானா ராஷ்டிர சமிதி 35 இடங்களிலும், காங்கிரஸ் 1 இடங்களிலும் முன்னிலை பெற்று வருகிறது. எப்படியும் ஐதராபாத் மாநகராட்சியை பாஜக கைப்பற்றும் என்று அம்மாநில நிர்வாகிகள், தொண்டர்கள் பட்டாசு வெடித்து நகரம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
 

Similar News