ஐதராபாத் மாநகராட்சியை தட்டி தூக்கும் பாஜக.. 80 இடங்களில் முன்னிலை.. பரிதாபத்தில் காங்கிரஸ்.!

ஐதராபாத் மாநகராட்சியை தட்டி தூக்கும் பாஜக.. 80 இடங்களில் முன்னிலை.. பரிதாபத்தில் காங்கிரஸ்.!

Update: 2020-12-04 11:22 GMT

தெலுங்கானா மாநிலத்தில் 150 வார்டுகளை கொண்ட ஐதராபாத் மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 1ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, பாஜக, காங்கிரஸ், உள்ளிட்ட பிற கட்சிகள் போட்டியிட்டது. இந்த தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி கொண்டிருக்கிறது.


இந்நிலையில், ஐதராபாத் மாநகராட்சியில் மொத்தமுள்ள 150 இடங்களில் 80க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக முன்னிலை பெற்று வருகிறது. 30க்கும் மேற்பட்ட இடங்களில் தெலங்கானா ராஷ்ட்ரீய சமீதி கட்சியும், 15 இடங்களில் ஓவைசியின் கட்சியும், 1 இடத்தில் காங்கிரஸ் முன்னிலை பெற்று வருகிறது.


இந்த முடிவின் அடிப்படையில் பாஜகவே மாநராட்சியை கைப்பற்றுகிறது. இதனால் பாஜக தொண்டர்கள் நகரம் முழுவதும் பட்டாசு வெடிக்க ஆரம்பித்துவிட்டனர். நகரமே பாஜக தொண்டர்களாகவே காட்சி அளிக்கும் நிலையை காண முடிகிறது.
 

Similar News