பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்காக பட்டாசு வெடித்து கொண்டாடிய தொண்டர்கள் கைது.!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டதில், தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகனுக்கு வாய்ப்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து அவர் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

Update: 2021-07-09 07:04 GMT

தமிழக பாஜக தலைவராக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான அண்ணாமலையை நேற்று அக்கட்சியின் தேசிய தலைமை அறிவித்தது. இதனால் தமிழகத்தில் உள்ள பாஜக தொண்டர்கள் பல இடங்களில் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டதில், தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகனுக்கு வாய்ப்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து அவர் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். 


இதனால் தமிழக பாஜக தலைவரை வேறு ஒருவரை நியமிக்க அக்கட்சியின் தலைமை முடிவு செய்தது. அதன்படி தமிழக பாஜக துணைத் தலைவராக இருந்த அண்ணாமலையை தலைவராக நியமித்து உத்தரவு பிறப்பித்தது. இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.


இந்நிலையில், கரூரில் பட்டாசு வெடித்து கொண்டாடிய பாஜகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்த கைதுக்கு ஆட்சியர் பிரபுசங்கர் உத்தரவின்பேரில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அனுமதியின்றி பட்டாசு வெடித்ததற்காக பாஜகவினரை கைது செய்ய ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினர் திமுகவினர் வெற்றி பெற்றபோது அனுமதி பெற்றா பட்டாசு வெடித்தனர் என போலீசாருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். பட்டாசு வெடித்த பாஜகவினரை வேண்டும் என்றே திமுக அரசு கைது செய்துள்ளது என பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

Similar News