நாடு முழுவதும் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவு விவரங்கள்: அதிக இடங்களில் பாஜக வெற்றி.!

நாடு முழுவதும் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவு விவரங்கள்: அதிக இடங்களில் பாஜக வெற்றி.!

Update: 2020-11-11 09:20 GMT
உத்தரபிரதேசத்தில் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் 7 தொகுதிகளில் 6 இடங்களை பாஜக கைப்பற்றியது. ஓரிடத்தில் மட்டும் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றது. பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை.

குஜராத்தில் 8 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் தோல்வியடைந்து மிகப்பெரும் பின்னடைவை சந்தித்தது.

அதேபோல மத்திய பிரதேசத்தில்  28 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் 19 இடத்தில் காங்கிரஸ் வென்றுள்ளது. காங்கிரஸ் 8 இடங்களிலும், பகுஜன்சமாஜ் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. பாஜகவின் இந்த வெற்றி அம்மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு பெரும்பான்மை அளித்து அக்கட்சிக்கு ஸ்திரத்தன்மையை அளித்துள்ளது.

தெலங்கானாவில் முன் எப்போதுமில்லாத வகையில் துபாக் சட்டமன்ற தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜகவிடம் ஆளும் தெலங்கானா சமிதி கட்சி வேட்பாளர் தோல்வியடைந்தார். கர்நாடகாவில் நடைபெற்ற 2 இடைதொகுதி தேர்தல்களிலும் பாஜகவே வெற்றியடைந்துள்ளது.

மணிப்பூரில் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் நான்கு தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. ஒரு தொகுதியில் சுயேட்சை ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். ஜார்கண்டில் 2 தொகுதிகளில் ஜே.எம்.எம். ஒரு தொகுதியையும், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஒரு தொகுதியையும் வென்றுள்ளன. ஹரியானா மற்றும் சட்டீஸ்கரில் தலா ஒரு தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.  

பெரும்பாலான மாநிலங்களில், பெரும்பாலான தொகுதிகளில் பாஜக பலமான வெற்றி முத்திரையை பதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.   

Similar News