ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தலில் அமோக வெற்றி - விவசாயிகள் போராட்டத்துக்கு மத்தியிலும் பா.ஜ.க அமோக வெற்றி.!

ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தலில் அமோக வெற்றி - விவசாயிகள் போராட்டத்துக்கு மத்தியிலும் பா.ஜ.க அமோக வெற்றி.!

Update: 2020-12-09 20:37 GMT

பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா, ராஜஸ்தானில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் பா.ஜ.க பெற்றுள்ள மகத்தான வெற்றி, ஏழைகள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை குறிக்கிறது என்று கூறினார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், "பா.ஜ.க மீது நம்பிக்கை வைத்ததற்காக காங்கிரஸ் ஆட்சி செய்யும் ராஜஸ்தான் மாநில பெண்கள், விவசாயிகள் மற்றும் பிற கிராமப்புற வாக்காளர்களுக்கு நன்றி" என தெரிவித்தார்.

ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 4,371 பஞ்சாயத்து சமிதி இடங்களில், பா.ஜ.க ஏற்கனவே 1,835 இடங்களைப் பிடித்துள்ளது. காங்கிரஸ் 1,718 இடங்களை வென்றுள்ளது. இதேபோல், ஜில்லா பரிஷத்தின் 636 இடங்களில், பா.ஜ.க 266 இடங்களை வென்றுள்ள நிலையில், காங்கிரஸ் 204 இடங்களை மட்டும் கைப்பற்றியுள்ளது.

மொத்தம் 21 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அண்மையில் மத்திய அரசால் இயற்றப்பட்ட வேளாண் சீர்திருத்தங்களுக்கு எதிராக மத்திய அரசு விவசாயிகள் போராட்டங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், பா.ஜ.கவுக்கு ஆதரவாக ராஜஸ்தான் தேர்தல் முடிவு வந்துள்ளது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

 

Similar News