பாஜகவில் சேருவது எனது சிறுவயது கனவு ! சொந்த கிராமத்தில் நெகிழ்ந்த மத்திய அமைச்சர் எல்.முருகன் !
தமிழக பாஜக முன்னாள் தலைவரும், மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன் கடந்த 16ம் தேதி முதல் மக்களை சந்தித்து ஆசிபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இதனிடையே, மத்திய இணை அமைச்சராக பதவியேற்ற பின்னர் எல்.முருகன் தனது சொந்த ஊருக்கு சென்று குலதெய்வ கோயில் தரிசனம் மற்றும் பெற்றோர்களிடம் ஆசிர்வாதம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

தமிழகத்தில் மக்களை சந்தித்து அவர்களிடம் ஆசி பெறும் நிகழ்ச்சியை பாஜக தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சி கடந்த 16ம் தேதி கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதனிடையே நேற்று 18ம் தேதி பரமத்தி வேலூர் அருகே உள்ள வாழவந்தி ஆர்.புதுப்பாளையத்தில் உள்ள தனது குலதெய்வக் கோயிலில் எல்.முருகன் வழிபட்டார். அங்கு நடைபெற்ற கோ பூஜையில் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் பாஜக தலைவர் கே.அண்ணாமலை, சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதனை முடித்துக்கொண்டு தனது சொந்த ஊரான கோனூருக்குச் சென்று தனது பெற்றோர்களிடம் ஆசி பெற்றார். அதனை தொடர்ந்து தான் படித்த அரசு பள்ளிக்கும் சென்று அங்கு பனை விதைகளை விதைத்தார்.
பின்னர் நடைபெற்ற மக்கள் ஆசி பொதுக்கூட்டத்தில் எல்.முருகன் பேசியதாவது: நாடு முழுவதும் புதிதாக பொறுப்பேற்ற 43 மத்திய அமைச்சர்களும், பிரதமர் மோடி உத்தரவின் பேரில் தங்களது மாநிலங்களுக்குச் சென்று மக்களை நேரில் சந்தித்து ஆசி பெற்று வருகின்றனர்.
அதன்படி நானும் தமிழகத்தில் 3 நாள் யாத்திரை பயணத்தை தொடங்கியுள்ளேன். இதன் மூலம் அனைத்து மக்களின் ஆசியும் பெற்று வருகிறேன். பிரதமர் மோடி ஏழை, எளியோர்களுக்காக பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.