பஞ்ச பூதங்களிலும் ஊழல் செய்த கட்சி'ன்னா அது தி.மு.க'தான் - சொன்னது யார்?

பஞ்ச பூதங்களிலும் ஊழல் செய்த கட்சி'ன்னா அது தி.மு.க'தான் - சொன்னது யார்?

Update: 2020-10-23 13:54 GMT

பஞ்ச பூதத்துலையும் ஊழல் செய்த கட்சி என்றால் அது தி.மு.க'தான் என்று அ.தி.மு.க'வின் செல்லூர்.ராஜூ கடுமையாக விமர்சித்துள்ளார்.

அ.தி.மு.க'வின் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அவர் பேசுகையில் கூறியதாவது, "கொட்டும் மழையில் ராபின்சன் பூங்காவில் திராவிட இயக்கத்தை ஆரம்பித்த அண்ணாவின் புகழை காப்பாற்றும் ஒரே இயக்கம் நமது அ.தி.மு.க இயக்கம் தான் தி.மு.க கிடையாது. தி.மு.க'வில் திராவிட கொள்கை என்பதே கிடையாது. புரட்சித்தலைவர் மட்டும் இந்த இயக்கத்தை ஆரம்பிக்காவிட்டால் திராவிட கொள்கையே அழித்து போயிருக்கும்" என்றார்.

மேலும் பேசிய அவர், "தி.மு.க'வில் வாரிசு அரசியல் தான் நடக்கிறது. அங்கு உழைப்பவர்களுக்கு மரியாதை கிடையாது. ஆனால் இங்கு அப்படி அல்ல. கிளைச் செயலாளராக இருந்தவர் தான் இன்றைக்கு முதலமைச்சர் ஆகியுள்ளார். அதேபோல் இளைஞரணி செயலாளராக இருந்தவர் தான் ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இதுபோன்று தி.மு.க'வில் பார்க்க முடியுமா? தொண்டர்களை நம்பாமல் 500 கோடி ரூபாய் கொடுத்து பிரசாந்த் கிஷோரை நம்பி தி.மு.க'வை நடத்துகிறார் ஸ்டாலின். ஆனால், முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் ஒன்றரை கோடி தொண்டர்களை நம்பி கட்சியை நடத்துகிறார்கள்" என்றார்.

"முல்லைப்பெரியாறு, காவேரி, கச்சத்தீவு போன்ற தமிழக உரிமைகளை எல்லாம் தங்களின் பதவி சுகத்திற்காக தி.மு.க'வினர் தாரை வார்த்து தமிழகத்துக்கு, தமிழினத்திற்கு மாபெரும் துரோகத்தை செய்தனர்"

"பஞ்சபூதங்களிலும் ஊழல் செய்தது தி.மு.க என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். ஊழலின் பிறப்பிடமே தி.மு.க தான். இந்த ஆட்சி இன்று போகும், நாளை போகும் என்று கிளி ஜோசியம் சொன்னார் ஸ்டாலின். ஆனால் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து பொற்கால ஆட்சியை நடத்தி வருகிறார் நமது முதலமைச்சர். வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலிலும் தமிழகத்தின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடியரை துணை முதலமைச்சர் இன்றைக்கு முன்மொழிந்துள்ளார்" என பேசினார்.

மேலும் தொடர்ந்து அ.தி.மு.க மூன்றாவது முறையாக ஆட்சியை கைபற்றும் என நம்பிக்கை தெரிவித்தார்.

Similar News