தி.மு.கவிடம் இரட்டை இலக்க தொகுதி 'யாசகம்' வாங்க திருமாவளவன் கையில் எடுத்த இந்து மத எதிர்ப்பு.!

தி.மு.கவிடம் இரட்டை இலக்க தொகுதி 'யாசகம்' வாங்க திருமாவளவன் கையில் எடுத்த இந்து மத எதிர்ப்பு.!

Update: 2020-11-01 09:23 GMT

அரசியல் தலைவர்கள் மக்களை பற்றி சிந்தித்து அவர்களின் முன்னேற்றத்தை பற்றி பேசி அரசியலில் வெற்றி பெற வேண்டும். மாறாக சில அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தனக்கு முக்கியத்துவம் இல்லாத போதும், தேர்தலின் போதும் எந்த ஒரு விவகாரத்தையாவது கையில் எடுத்து அதனை பற்றி சர்ச்சை வரும் வேளையில் மக்கள் மத்தியிலும், பிற கட்சிகளின் மத்தியிலும் கோபத்தையோ, அனுதாபத்தையோ சம்பாதித்து அதன் மூலம் பேசு பொருளாக வலம் வர வேண்டும் என நினைப்பர்.

அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் 'மனுஸ்மிரிதி' பற்றி பேசி தமிழகத்தில் அபரிமிதமாக வளர்ந்து வரும் பா.ஜ.கவின் எதிர்ப்பை சம்பாதித்து அந்த வெளிச்சத்தில் தி.மு.க கூட்டணியில் இரட்டை இலக்க தொகுதிகள் வாங்கி தேர்தலில் போட்டியிட முனைப்பு காட்டியுள்ளார்.

இன்னும் 6 மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரவிருக்கிறது. இதனை மையமாக வைத்து தமிழக அரசியல் கட்சிகள் தங்களின் முதல்வர் வேட்பாளர், கட்சி கூட்டணி, எந்த தொகுதிகள் யார் யாருக்கு, தேர்தல் அறிக்கை என பம்பரமாக சுழன்று வருகின்றனர்.

இதற்கிடையில் பிரதான கட்சிகளின் கணக்குகளோ தன்னோடு சட்டமன்ற தேர்தலில் இணையவிருக்கும் கட்சிகளோடு மறைமுகமாக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடவும், அதற்கான தொகுதிகள் ஒதுக்கீடும் பற்றி பேச துவங்கிவிட்டன. இதற்கிடையில் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சியை யாரும் கண்டுகொள்ளவில்லை என்பதே உண்மை.

மற்ற கட்சிகள் எத்தனை தொகுதி ஒதுக்கப்படும், யார் வேட்பாளர் என பேசி வரும் நிலையில் விடுதலை சிறுத்தைகளோ யார் கூட்டணிக்கு கூப்பிடுவார்கள் என வேடிக்கை பார்த்துகொண்டு நிற்கும் சூழல் உருவானது. ஏற்கனவே இருக்கும் தி.மு.க கூட்டணியிலோ விடுதலை சிறுத்தைகள் இருந்தால் நல்லது, போனால் இன்னும் அதிகம் நல்லது என்ற தோணியிலே திருமாவளவன் கட்சியை கையாண்டு வந்தது. அப்படியே இருந்தாலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தி.மு.க'வின் சின்னமான உதயசூரியனில்'தான் போட்டியிட வேண்டும் என்ற கட்டளையும் இடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படி தமிழக அலசியலில் சீந்துவார் இல்லாத நிலையில் திருமாவளவன் போட்ட கணக்குதான் 'மனுஸ்மிரிதி'. தமிழக அரசியல் கட்சிகள் தற்பொழுது ஒன்றை நன்கு உணர்ந்துள்ளன அது பா.ஜ.க'வை ஆதரித்தோ, எதிர்த்தோ அரசியல் செய்தால் மட்டுமே தமிழக அரசியலில் நிலைக்க முடியும் என, ஏனெனில் தமிழக பா.ஜ.க'வின் வளர்ச்சி மக்கள் மத்தியில் அப்படி விருட்சமாய் வளர்ந்து வருகிறது, குறிப்பாக இளைஞர்கள் மத்தியில். இப்படி இருக்கும் வேளையில் எதை காரணம் காட்டினால் பா.ஜ.க எதிர்ப்பார்கள் எனவும் தி.மு.க ஆதரவிற்கு வரும் எனவும் திருமாவளவன் நன்கு உணர்ந்துள்ளார்.

ஆகையால் வெறும் இரட்டை இலக்க தொகுதிகளுக்காக இந்துக்களை இழிந்து பேசி அதனை தி.மு.க'வை வரிந்துகட்ட வைத்து அதன்மூலம் தொகுதிகள் வாங்கி அரசியலில் பிழைக்கலாம் என்பதே திருமாவளவன் கணக்கு. அதனால் தான் பிழைக்க திருமாவளவனால் எடுக்கப்பட்டதே 'மனுஸ்மிரிதி'.

அரசியலில் தான் பிழைக்க இந்துக்களை இழிவுபடுத்தும் திருமாவளவன் நடவடிக்ககைளை இந்து சமுதாயமும் தக்க பதிலடி தர பார்த்து காத்துகொண்டிருக்கிறது.

Similar News