என்னை எப்போ வேண்டுமானாலும் பார்க்கலாம்.. ஸ்டாலின் வீட்டின் கேட்டை நெருங்க முடியாது.. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.!

தற்போது தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனால் சாதி, மதச்சண்டைகள் இல்லை. ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் அதனை இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுகிறது.

Update: 2021-04-01 10:49 GMT

நீலகிரி மாவட்டம், கூடலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜெயசீலனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பிடித்தமான மாவட்டம் நீலகிரி. இதனை அவர் தனது சொந்த ஊர் போன்று கருதியதால், இது பெருமையான மாவட்டமாகும். இந்த மாவட்டத்துக்கு பல்வேறு திட்டங்களையும் அளித்துள்ளார்.

தற்போது தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனால் சாதி, மதச்சண்டைகள் இல்லை. ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் அதனை இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுகிறது.


 



மேலும், கடந்த கால திமுக ஆட்சியில் கடுமையான மின்வெட்டு, அதனால் வேளாண் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டது. ஆனால் தற்போது நிலைமை அப்படி இல்லை. மின் மிகை மாநிலமாக மாறியுள்ளது. கல்வி, வேலை வாய்ப்பு உயர்ந்துள்ளது. திமுக இதனை செய்யவில்லை. அனைத்தும் அம்மாவின் அரசு செய்துள்ளது.




 


மேலும், அதிமுக அமைந்த உடன் பெண்களுக்கு மாதம் ரூ.1,500 மற்றும் வாஷிங் மெஷின், வருடத்திற்கு 6 சிலிண்டர் வழங்கப்படும் என்றார். அது மட்டுமின்றி என்னை எளிதில் நீங்கள் பார்க்கலாம். எனவே வரும் தேர்தலில் இரட்டை இலைக்கு வாக்களித்து பெருவாரியான வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும்.

ஸ்டாலினை நம்பி ஓட்டு போட்டீர்கள் என்றால் அவரின் வீட்டின் கேட் பக்கம்கூட செல்ல முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Similar News