பணம் கொடுத்தால்தான் சீட்டு.. காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு.!

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளை பணத்திற்காக விற்பனை செய்யப்படுதாக அக்கட்சியின் எம்.பி. ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

Update: 2021-03-13 11:17 GMT

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளை பணத்திற்காக விற்பனை செய்யப்படுதாக அக்கட்சியின் எம்.பி. ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இன்னும் வேட்பாளர்கள் யார் என்று அறிவிப்பு வெளியிடவில்லை, அதற்குள் அந்த கட்சியில் உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. அதே நேரத்தில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு எதிராக உண்ணாவிரதம் இருப்பதாக சில நிர்வாகிகள் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.


 



இதனிடையே ஜோதிமணி எம்.பி. தனது ட்விட்டர் பக்கத்தில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். காங்கிரஸ் தொண்டர்களின் மனதில் தற்போது கொந்தளித்துக்கொண்டிருக்கின்ற உணர்வுகளை நான் அறிவேன். தொகுதி, வேட்பாளர் தேர்வு வெளிப்படையாக இல்லை. நிறைய தவறு நடக்கிறது. தட்டிக்கேட்டேன். பதிலில்லை. தொண்டர்களின் இரத்தத்தை குடிக்கும் மனசாட்சியற்ற தலைவர்கள் நியாயத்தின் குரலை செவிமடுக்கவில்லை.


 



நீண்டகாலம் கட்சிக்கு உழைத்த வெற்றி வாய்ப்புள்ள உண்மையான விசுவாசிகள் புறக்கணிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் சீட் பெறமுடியும் என்பது அக்கிரமம்.காங்கிரஸ் கட்சி தொண்டர்களில் இரத்தத்திலும்,வியர்வையிலும் உருவானது. இதை அழிக்க யாருக்கும் உரிமையில்லை.




 


எனது தலைவர் ராகுல் பணம் தான் பிரதானமென நினைத்திருந்தால் இன்று நான் எம்.பி கிடையாது. இந்த தலைவர்கள் தொண்டர்களுக்கு மட்டுமல்ல தன்னை நம்பிய தலைவருக்கும் துரோகம் செய்கிறார்கள். நமது கட்சியையும், நமது தலைவரின் கௌரவத்தையும் தொண்டர்களாகிய நாம் தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.




 


உண்மையான கட்சி விசுவாசிகளுக்கு கண்முன்னால் இழைக்கப்படும் துரோகத்தை கண்டு எனது இரத்தம் கொதிக்கிறது. எனது யுத்தத்தை நான் தொடர்வேன். தொண்டர்களின் குரலாக தொடர்ந்து ஒலிப்பேன். நடப்பது நடக்கட்டும். எதிரிகளை மட்டுமல்ல துரோகிகளையும் எதிர்கொள்ளும் வலிமை நமக்கு உண்டு" என்று குறிப்பிட்டுள்ளார்.




 


இவரது கருத்தால் காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகம் இல்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது. பணம் கொடுத்தால் மட்டும் சட்டமன்ற தேர்தலில் சீட் என்ற நிலையை காங்கிரஸ் உருவாக்கியுள்ளது. இவர்கள் எப்போது திருந்துவார்கள் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Similar News