சர்ச்சையாக பேசிய கமல் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது.. மதுரை உயர்நீதிமன்றம்.!

கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது நடிகர் கமல்ஹாசன் சர்ச்சைக்குரிய வகையில் அரசை விமர்சனம் செய்த வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.

Update: 2021-03-13 05:09 GMT

கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது நடிகர் கமல்ஹாசன் சர்ச்சைக்குரிய வகையில் அரசை விமர்சனம் செய்த வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு அரவக்குறிச்சி பொதுக்கூட்டத்தில் அரசு மீது சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதனையடுத்து தமிழக அரசு சார்பில் அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இதனையடுத்து தன் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகர் கமலஹாசன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.




 


அப்போது அவரது மனுவில் நல்லிணக்கத்தை பாதிக்கின்ற வகையில் தான் எந்த கருத்தையும் பேசவில்லை எனவும், எனவே தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஹேமலதா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு கரூர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

மேலும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை மே 3ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அரசுத் தரப்பில் கூறப்பட்டது.இதனை கேட்டுக்கொண்ட நீதிபதி வழக்கை ரத்து செய்ய இயலாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Similar News