வாடகைக்கு தொண்டர்கள் பிடித்ததிலும் ஊழல் - தொடரும் காங்கிரஸ் சாதனைகள்.!

வாடகைக்கு தொண்டர்கள் பிடித்ததிலும் ஊழல் - தொடரும் காங்கிரஸ் சாதனைகள்.!

Update: 2020-11-10 17:10 GMT

தலித் மக்கள் மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமைகளை எதிர்த்து போராடுவதாகக் கூறி தமிழக காங்கிரஸ் சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் ஒரு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். தமிழக பா.ஜ.கவின் வேல் யாத்திரைக்கு போட்டியாக காவடி யாத்திரை என்று ஒரு காமெடி நடத்ததோடு மேடையில் தலைவர்கள் ஒரு பக்கமும் கீழே 'தொண்டர்கள்' எதிர் பக்கமும் திரும்பி நின்று கொண்டு கோஷம் போட்ட காமெடியும் நடந்தது. 

  தேசிய செயலாளர் சஞ்சய் தத் மற்றும் தமிழக தேர்தல் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் ஆகியோர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கெத்து காட்ட முயற்சித்திருக்கிறார் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.

தலைமைக்கே ஆளில்லாத போது தொண்டர்களை எங்கே இருந்து அழைத்து வருவது. எனவே வாட்சப் மூலம் மூன்று மணி நேர வேலைக்கு ஒரு பிரியாணி பொட்டலமும் ₹ 250 ரூபாய் பணமும் வழங்கப்படும் என்று விளம்பரம் செய்து இளைஞர்களைத் திரட்டியுள்ளனர்.
 

கூட்டம் முடிந்த பிறகும் இளைஞர்கள் கலைந்து செல்லாமல் கூட்டமாக நின்று கொண்டு இருக்கவே என்ன, ஏது என்று விசாரித்த போது வெளிப்பட்டிருக்கிறது குட்டு. அங்கிருந்த ஒருவரைச் சூழ்ந்து கொண்டு "பேசியபடி தர வேண்டும்" என்று பிரச்சினை செய்திருக்கிறார்கள் அந்த இளைஞர்கள். அவரோ செய்தியாளர்களைச் பார்த்து விட்டு நைசாக நழுவ முயன்றிருக்கிறார்.

ஆனால் இளைஞர்கள் தொடர்ந்து சென்று "பிரியாணி மட்டும் கொடுத்தால் எப்படி. பேசியபடி 250 ரூபாய் பணத்தைக் கொடுங்க" என்று வற்புறுத்தவே வேறு வழி இல்லாமல் ஒரு டோக்கனைக் கொடுத்து பிறகு வாங்கிக் கொள்ளுமாறு கூறி இருக்கிறார்.

 

"Spot payனு சொன்னாங்க இப்ப என்னடான்னா அலைய விடுறாங்க" என்று வேதனை தெரிவித்துள்ளார் அவர்களில் ஒரு இளைஞர். இளைஞர்கள் பணம் கொடுக்காவிட்டால் இடத்தை விட்டு நகர மாட்டோம் என அச்சுறுத்தவே வேறு வழியின்றி ஆளுக்கு ₹ 50 ரூபாய் கொடுத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்திருக்கிறார் அவர்களை அழைத்து வந்த காங்கிரஸ் நிர்வாகி.

தங்களுக்கு என்று கொடுக்கப்பட்ட பணம் 4,5 பேர் கைமாறி வந்ததால் காங்கிரஸ் கட்சிக்காரர்களே பணத்தை எடுத்துக் கொண்டு வெறும் 50 ரூபாய் கொடுத்து ஏமாற்றி விட்டதாக இளைஞர்கள் புலம்பியபடி வீடு திரும்பி இருக்கின்றனர்.

 ரஃபேல் போர் விமானம் வாங்கியதில் ஊழல், பண மதிப்பிழப்பில் ஊழல், கொரோனா சோதனைக் கருவி வாங்கியதில் ஊழல் என்று பா.ஜ‌.க அரசு மீது ஆதாரமின்றி வாய்க்கு வந்ததில் எல்லாம் ஊழல் குற்றச்சாட்டு வைக்கும் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் ராகுல் காந்திக்கு சற்றும் சளைக்காத உள்ளூர்த் தலைவர்கள் தொண்டர்களை வாடகைக்குப் பிடித்ததிலும் ஊழல் செய்து சாதனை செய்திருக்கின்றனர்.

Similar News