விவசாயிகள் பிரச்சனையில் தி.மு.க., பொய் பிரச்சாரம் செய்கிறது.. பா.ஜ., மாநில தலைவர் எல்.முருகன்.!

விவசாயிகள் பிரச்சனையில் தி.மு.க., பொய் பிரச்சாரம் செய்கிறது.. பா.ஜ., மாநில தலைவர் எல்.முருகன்.!

Update: 2021-01-07 17:24 GMT

சென்னையில் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று புதிதாக கட்சியில் இணையும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் கலந்து கொண்டு பேசிதாவது: இன்றைய பாஜ கட்சியில் தங்களை தாங்களாகவே முன்வந்து இணைத்துக் கொள்கிறார்கள். அடித்தட்டு மக்கள் தான் இன்று பாஜகவை அலங்கரித்து வருகிறார்கள் எனக் கூறினார்.

ஊழலற்ற ஆட்சியை தந்துக்கொண்டிருக்கும் பிரதமர் மோடி அவர்களுடைய ஆட்சியை வேண்டும் என்று மக்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். பிரதமர் மோடி தமிழகத்திற்கு செய்த விஷயங்கள் எண்ணில் அடங்காதவை என்றும் அதில் மிக முக்கியமானது கியாஸ் கனக்க்ஷன், ஜந்தன் அக்கவுண்ட், ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை இலவசமாக கட்டித் தரப்படுள்ளது.

மேலும், தமிழகத்தில் மட்டும் 41லட்சம் விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ.6,000 அவர்களின் வங்கி கணக்கிலே வரவு வைக்கப்படுகிறது. விவசாயிகளுக்கு நல்லது தான் மோடி அவர்கள் செய்கிறார் என்பதால் தான் அவர்கள் பாஜகவை ஆதரிக்கின்றனர். இவ்வளவு செய்திருந்தும் திமுகவினர் தமிழகத்தில் பொய் பிரச்சாரம் செய்கிறார்கள் என குறிப்பிட்டார். மேலும், தேசத்தின் வளர்ச்சி தான் முக்கியம் என்ற கொள்கையை கொண்டுள்ளது பாஜக. இவ்வாறு அவர் பேசினார்.

Similar News