திருப்பூரில் தி.மு.க., ம.தி.மு.க., பிரமுகர் வீடுகளில் ஐடி ரெய்டு.!

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் அதிகளவு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவார்கள் என்று ரகசிய தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. இதனால் முக்கிய பிரமுகர்களின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Update: 2021-03-17 14:05 GMT

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் அதிகளவு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவார்கள் என்று ரகசிய தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. இதனால் முக்கிய பிரமுகர்களின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் திமுக, மதிமுக பிரமுகர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மதிமுக மாவட்ட துணைச் செயலாளராக இருப்பவர் கவின் நாகராஜ், இவரது வீடு தாராபுரம் அலங்கியம் சாலையில் உள்ளது. இவரது வீட்டுக்கு வருமான வரித்துறையைச் சேர்ந்த 7பேர் கொண்ட குழுவினர் இன்று மாலை 4 மணியளவில் சென்று தற்போது வரை சோதனை செய்து வருகின்றனர்.

இதே போன்று திமுக நகர செயலாளர் தனசேகர் என்பவரின் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுவது தாராபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News