தி.மு.க-வின் வாக்குறுதிகள் எங்கே? வெள்ளை அறிக்கையின் நோக்கம் என்ன?

வெள்ளை அறிக்கையை வெளியிட்டு மக்களை ஏமாற்ற தி.மு.க தயாராகிவிட்டதாக தெரிகிறது.

Update: 2021-08-09 08:15 GMT

வாக்குறுதிகள் என்னவாகின என மக்கள் கேட்பதை மடைமாற்ற வெள்ளை அறிக்கை என்ன கேடயத்தை தி.மு.க அரசு கையில் எடுத்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தமிழக நிதிநிலை தொடர்பான 120 பக்கங்கள் கொண்ட வெள்ளை கொண்ட அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். அதில், "இந்தியாவில் வேறெந்த மாநிலமும் தமிழ்நாடு சந்தித்ததை போன்ற பொருளாதர சரிவை சந்திக்கவில்லை. கொரோனா தொற்று வருவதற்கு முன்பே வருவாய் பற்றாக்குறை தொடங்கிவிட்டது. கடந்த 5 ஆண்டுகளில் வாங்கப்பட்ட 3 லட்சம் கோடி பொதுக்கடனில் 50% வருவாய் பற்றாக்குறைக்கான செலவினம். அதிமுகவின் கையாளாகாத் தனத்தால், ஊழல் நிறைந்த ஆட்சியால் தமிழ் நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2,69,976.00 கடன் சுமத்தப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.

தேர்தல் சமயத்தில் நூற்றுக்கணக்கில் வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு ஆட்சி அமைத்து நூறு நாட்களை தொடவிருக்கும் தி.மு.க'விடம் மக்கள் தற்பொழுது குடும்பதலைவிகளுக்கு 1000 ரூபாய் எங்கே? பெட்ரோல், டீசல் விலை ரூ.5 குறைப்பு எங்கே? மாதம் ஒருமுறை மின் கட்டண முறை எங்கே? 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் உதவித் தொகை 1500 ரூபாயாக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு எங்கே?

32 லட்சம் ஆதவற்ற பெண்கள், கைம்பெண்கள், 50 வயதைக் கடந்த மணமாகாத பெண்கள், மாற்றுத் திறனாளிகள், உழவர் பாதுகாப்புத் திட்ட பயனாளிகள், இலங்கை அகதிகள் ஓய்வூதியம் 1500 ரூபாயாக ஆக்கப்படும் என்ற அறிவிப்பு எங்கே? என தொடர்ச்சியாக மக்கள் கேள்வி கேட்க துவங்கிய வேளையில் அதற்கு பதிலளிக்கு இயலாத நிலையில் தி.மு.க தற்பொழுது வெள்ளை அறிக்கை என நாடகமாடுவதாக கருத்துக்கள் வெளிவருகின்றன.

கடந்த அ.தி.மு.க அரசு கடனில் விட்டுவிட்டது எங்களால் வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியவில்லை என சொல்லாமல் சொல்ல இந்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டு மக்களை ஏமாற்ற தி.மு.க தயாராகிவிட்டதாக தெரிகிறது.

Tags:    

Similar News