நாளை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு.. அரசியல் கட்சிகள் மும்முரம்.!
நாளை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு.. அரசியல் கட்சிகள் மும்முரம்.!
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் பரபரப்பாக வேலை பார்த்து வருகிறது என்று கூறலாம். புதிய வாக்காளர் பட்டியல் தயாரிப்பது, பெயர் சேர்ப்பது நீக்குவது போன்ற வேலைகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் நாளை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார். காலை 11.30 மணி அளவில் அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் இந்த பட்டியலை வெளியிடப்பட உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து இம்மாதம் 21 மற்றும் 22 தேதிகளில் அடுத்த மாதம் 12, 13ம் தேதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது, திருத்தம் செய்வது தொடர்பாக சிறப்பு முகாம்களும் நடத்தப்படவுள்ளதாக அவர் கூறினார்.
வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள விரும்புவோர் நான்கு நாட்கள் நடைபெறும் சிறப்பு முகாம்களை பயன்படுத்தி திருத்தங்களை மேற்கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கு அரசியல் கட்சிகள் தீவிரமாக வேலை செய்து வருகிறது. அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் எப்படியும் ஜெயித்தாக வேண்டும் கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்து வருகிறது.