மேகதாது அணையை சட்டப்படி தடுத்திருவோம்.. அமைச்சர் துரைமுருகன் அளிக்கும் உத்தரவாதம்.!

மேகதாதுவில் அணை கட்டுவதை சட்டப்படி தடுத்து நிறுத்துவோம் என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

Update: 2021-07-13 02:00 GMT

மேகதாதுவில் அணை கட்டுவதை சட்டப்படி தடுத்து நிறுத்துவோம் என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

தமிழக எல்லையில் அமைந்துள்ள மேகதாது என்ற பகுதியில் காவிரி நீர் ஓடுகிறது. அந்த இடத்தில் புதிதாக அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதற்கான அனைத்து பணிகளையும் அம்மாநில அரசு முன்னெடுத்து வருகிறது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் நேற்று அனைத்துக்கட்சி கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.


இதனிடையே கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: மேகதாது அணை கட்டுமான பணியை நிறுத்தும் பேச்சுக்கே இடமில்லை. குடிநீர் தேவை முக்கியமானது என்பதால் அணை கட்டுவதற்கும், மக்களின் நலனைப் பாதுகாக்கவும், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு உரிமை உள்ளது.

தேவையின்றி குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. எங்கள் மாநிலத்தின் கோரிக்கையை மத்திய அரசு சட்ட ரீதியில் பரிசீலனை செய்யும். எனவே இப்பிரச்சனையை காவிரி தீர்ப்பாயம் தீர்த்து வைத்தால் மேகதாது அணையை நிறுத்துவதற்கு எந்தக் காரணமும் இல்லை எனக் கூறினார்.


இந்நிலையில், கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அளிக்கும் வகையில் கூறியிருப்பதாவது: மேகதாது அணை கட்டப்படுவதை எந்த நிலையிலும் சட்டப்படி தடுத்தே தீருவோம். ஒரு மாநிலத்திற்குள் ஓடுகின்ற நீர் அம்மாநிலத்திற்கே சொந்தம் கொண்டாட முடியாது. நதி நீர் தேசிய சொத்து என்பதை கர்நாடக அமைச்சர் அறிந்திருப்பார் என்று நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Similar News