மக்கள் போராட்டக்களத்தில் குதிப்பதற்கு முன் தி.மு.க. திருந்த வேண்டும்! எடப்பாடி பழனிசாமி!
தமிழக மக்கள் போராட்டக்களத்தில் குதிப்பதற்கு முன்னர் திமுக அரசு தங்களை திருத்திக்கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பரபரப்பான அறிக்கை வெளியிட்டுள்ளார்.;
தமிழக மக்கள் போராட்டக்களத்தில் குதிப்பதற்கு முன்னர் திமுக அரசு தங்களை திருத்திக்கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பரபரப்பான அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக ஆட்சியின் 100 நாள் செயல்பாடுகளில் ஏமாற்றம் அடைந்த மக்கள் விழிபிதுங்கி உள்ளனர். இந்த அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற, பல்வேறு நிபந்தனைகளை விதிக்க இருப்பதாக செய்திகள் உலா வருகின்றன.
5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி சலுகை பலருக்கு கிடைத்திருக்கக்கூடாது என்பதற்காக நிபந்தனைகளை விதிக்க திமுக அரசின் கூட்டுறவுத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. திமுக தேர்தல் வாக்குறுதிகளை நம்பி ஓட்டு போட்ட மக்களை இனியும் ஏமாற்றாமல் அவர்கள் வியப்படைந்து போராட்டக் களத்தில் குதிப்பதற்கு முன்பு, அதிர்ஷ்டமாக ஆட்சிக்கு வந்த இந்த அரசு தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்.
எனவே கூட்டுறவு சங்கம் மற்றும் பயிர்க்கடனை உடனே தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Source: Dinamalar
Image Courtesy: Dinamalar
https://www.dinamalar.com/news_detail.asp?id=2823212