தேர்தல் முடிவுகள் வெளிவர இரவு 12 மணி ஆகலாம்.. சத்யபிரதா சாகு.!

தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியதாவது: 6 தொகுதிகளில் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

Update: 2021-05-01 10:50 GMT

தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (மே 2) எண்ணப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. இதனிடையே தேர்தல் முடிவுகள் வெளியாவதில் காலதாமதம் ஆகும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் கூறியுள்ளார்.




 


தமிழகம் உட்பட 5 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகிறது. அதன்படி தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனிடையே தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் பதிவான வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பாக 75 மையங்களில் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியதாவது: 6 தொகுதிகளில் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.




 


அதற்காக புதிதாக 6 தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்கு எண்ணிக்கை மையங்கள் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்படும். அந்த சமயத்தில் வாக்கு எண்ணும் பணிகள் நிறுத்தி வைக்கப்படும். மேலும் கொரோனா தொற்று விதிமுறைகள் காரணமாக முடிவுகள் வெளியாவதில் காலதாமதமாகும் என கூறியுள்ளார்.

Similar News