உள்ளாட்சித் தேர்தலை நடத்த விடாமல் தடை கேட்டு தற்பொழுது 2,577 கோடி ரூபாய் நஷ்டம் என புலம்பும் தி.மு.க !

எதிர்கட்சியாக ஒரு பேச்சு, ஆட்சியில் இருக்கும் போது ஒரு பேச்சு என்ற தி.மு.க'வின் கபடதாரி இரட்டை வேடத்திற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

Update: 2021-08-11 10:00 GMT

வெள்ளை அறிக்கையில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை அ.தி.மு.க அரசு நடத்தாத காரணத்தால் தமிழக அரசுக்கு 2,577 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார். அனால் உண்மை என்னவெனில் இருமுறை உள்ளாட்சி தேர்தல் நடத்த கூடாது  என வழக்கு தொடுத்தது தி.மு.க'தான்.

கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி காலையில் கடந்த அ.தி.மு.க அரசின் நிதி செயல்பாடுகள் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டுப் பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறுகையில், "தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை அ.தி.மு.க அரசு நடத்தாத காரணத்தால் தமிழக அரசுக்கு 2,577 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது" என ஜம்பமாக கூறினார்.

ஆனால் உண்மை என்னவென்றால், "2016'ம் ஆண்டு செப்டம்பர் 26-ம் தேதி தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பினை வெளியிட்டது. அதில், அக்டோபர் 17 ,19-ம் தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியானது. அறிவிப்பு வெளியான மறுநாளில் இருந்தே வேட்புமனுத் தாக்கலும் தொடங்கப்பட்டது. ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும்போதே, அவரது பெயரில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. ஆனால், தேர்தலுக்குத் தயாராகாத தி.மு.க தேர்தல் பயத்தினால் , "உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடியினருக்கு முறையாக இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. அதனால், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அரசாணையை ரத்து செய்ய வேண்டும்" என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அதனை விசாரித்த நீதிமன்றம், இடஒதுக்கீடு பற்றி எந்தக் குறையும் சொல்லவில்லை, மாறாக தமிழ்நாடு பஞ்சாயத்து (தேர்தல்) விதிகள் 1995 (பிரிவு 24-ஐ) மீறும் வகையில் உள்ளது என்று கூறி தேர்தல் அறிவிப்பினை ரத்து செய்தது நீதிமன்றம். இது ஒரு முறை.

மற்றொரு முறையாக மீண்டும் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த 2019 டிசம்பர் 2-ம் தேதி வெளியிடப்பட்டது. இம்முறை ஊரக உள்ளாட்சித் தேர்தல் மட்டுமே நடத்தப்படும் என அரசாணை வெளியிடப்பட்டது. 'புதிதாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால் வார்டு மறுவரைப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை' என்று கூறி மீண்டும் உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை கோரி தோல்வி பயத்தால் உச்ச நீதிமன்றம் சென்றது தி.மு.க. அதை விசாரித்த நீதிமன்றம், புதிதாகப் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களுக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தும்படி உத்தரவிட்டது. அதன்படிதான் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.

இவ்வாறாக இருமுறையும் தேர்தலை நடத்த விடாமல் நீதிமன்றம் சென்று தடை வாங்கிவிட்டு தற்பொழுது ஆட்சி வந்தவுடன் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமே என்ற பயத்துடன் "தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை அ.தி.மு.க அரசு நடத்தாத காரணத்தால் தமிழக அரசுக்கு 2,577 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது" என தமிழக அரசு நீலிக்கண்ணீர் வடிக்கிறது. வாக்குறதிகளை மக்கள் மறந்துபோகலாம் ஆனால் வரலாற்றை யாரும் மாற்ற இயலாது. எதிர்கட்சியாக ஒரு பேச்சு, ஆட்சியில் இருக்கும் போது ஒரு பேச்சு என்ற தி.மு.க'வின் கபடதாரி இரட்டை வேடத்திற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.


Source - Junior Vikatan

Tags:    

Similar News