இரணியல் பேரூராட்சி வார்டில் ஒத்த ஓட்டு வாங்கிய தி.மு.க.!

Update: 2022-02-22 12:08 GMT

இரணியல் பேரூராட்சி 4வது வார்டில் திமுக பிரமூகர் ஒரு ஓட்டு வாங்கிய சம்பவம் அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வார்டுகளில் 12 வார்டுகளை பாஜக கைப்பற்றியுள்ளது. சுயேட்சை வேட்பாளர்கள் இரண்டு வார்டுகளையும், நாம் தமிழர் கட்சி ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளது. 

4-வது வார்டில், மொத்தம் 283 வாக்குகள் பதிவான நிலையில், 147 வாக்குகள் பெற்று பா.ஜ.க-வைச் சேர்ந்த கிரிஜா வெற்றி பெற்றார். அ.தி.மு.க வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் 74 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும், கங்கிரஸ் வேட்பாளர் ரெத்னாபாய் 61 வாக்குகள் பெற்று மூன்றாம் இடமும் பெற்றார். சுயேச்சையாக போட்டியிட்ட தி.மு.க-வைச் சேர்ந்த முருகன் 1 ஓட்டு வாங்கினார். அதே வார்டில் சுயேச்சையாக போட்டியிட்ட கார்த்திக் ஒரு வாக்கு கூட பெறாமல் தோல்வியடைந்தார்.

திமுக பிரமுகர் ஒரு ஓட்டு மட்டும் வாங்கியுள்ளதையடுத்து, ஒத்த ஓட்டு திமுக என்று இணையத்தில் கலாய்த்து வருகின்றனர். கடந்த காலங்களில் பாஜகவை கிண்டல் செய்த திமுக தற்போது ஒத்து ஓட்டு வாங்கி அவமானப்பட்டு நிற்கிறது.

Tags:    

Similar News