இணைய சூதாட்ட செயலிகளுக்கு அ.தி.மு.க அரசு விதித்த தடை நீக்கம் - என்ன செய்யப்போகிறது விடியல் அரசு?

அ.தி.மு.க அரசு தடை செய்த இணைய சூதாட்ட செயலிகள் தடையை நீதிமன்றம் நீக்கியுள்ள நிலையில் தி.மு.க அரசு என்ன செய்யும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Update: 2021-08-03 16:00 GMT

அ.தி.மு.க அரசு தடை செய்த இணைய சூதாட்ட செயலிகள் தடையை நீதிமன்றம் நீக்கியுள்ள நிலையில் தி.மு.க அரசு என்ன செய்யும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இணையத்தில் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து கடந்த 2020'ம் ஆண்டு நவம்பர் 21'ம் தேதி அப்போதைய அ.தி.மு.க ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இவ்வழக்கின் இருதரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி தரப்பு, "தமிழக அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டம், அரசியல் சாசனத்துக்கு விரோதமானது எனவும், போதுமான காரணங்களை விளக்காமல் பிறப்பிக்கப்பட்டுள்ளது" என கூறி சட்டத்தை ரத்து செய்தனர். மேலும், "உரிய முறைப்படுத்தும் விதிகள் இல்லாமல் ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க முடியாது" எனத் தெரிவித்த நீதிபதிகள், "உரிய விதிகளுடன் புதிய சட்டம் கொண்டு வர அரசுக்கு எந்த தடையும் இல்லை" எனவும் தீர்ப்பளித்தனர்.

இதன்மூலம் தமிழகத்தில் மீண்டும் இணைய சூதாட்ட செயலிகள் இயங்க வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிகிறது. மக்களுக்கு விடியலை தருகிறோம் என கோடிகளில் விளம்பரம் செய்து ஆட்சியை பிடித்துள்ள தி.மு.க சார்பில் இதுகுறித்து இதுவரை ஏதும் அறிவிப்பு வெளியாகவில்லை, மேலும் இந்த சூதாட்ட விளையாட்டுக்களால் ஆபத்து என்ற நிலையில் இதன் தடையை சட்ட ரீதியாக நீடிக்கவும் தி.மு.க அரசு எவ்வித நடவடிக்கை எடுக்கும் என கேள்விக்குறியாகியுள்ளது.

சௌர்ஸ் : Asianet News

Tags:    

Similar News