பட்ஜெட்டை புரிந்து கொள்வதற்கு மூளை தேவை.. திருமாவளவனுக்கு சாட்டையடி கொடுத்த காயத்ரி ரகுராம்.!

நடப்பு நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல வகையான திட்டங்களுக்கு அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-02-02 10:46 GMT

நடப்பு நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல வகையான திட்டங்களுக்கு அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு இடையிலும் பட்ஜெட்டில் அதிகமான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது பற்றி அனைத்து தரப்பு மக்களும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் உள்ள திமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தேவையின்றி விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். 

இந்நிலையில், பட்ஜெட் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: முதல் முறையாக ‘காகிதமில்லா’ பட்ஜெட். வழக்கம்போல மக்களுக்கு ‘பயனில்லா’ பட்ஜெட். இது நாட்டு ‘வளர்ச்சிக்கானது’ அல்ல, மோடி நண்பர்களுக்கு நாட்டை ‘விற்பதற்கானது’. எல்.ஐ.சி., பாரத் பெட்ரோலியம் துறைமுகங்கள், ஏர்இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களையும் நிலங்களையும் விற்கப்போகும் பட்ஜெட் என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவர் காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் திமுக கூட்டணிக்கு கடுமையான விமர்சனத்தை பதிவிட்டுள்ளார். பட்ஜெட்டினை புரிந்துகொள்ளும் அளவுக்கு ‘மூளை தேவை’ என்று கூறியுள்ளார்.

மேலும் பப்பு பல்கலைக்கழகத்தின் தோல்வி மாணவர்கள் எல்லோரும் பட்ஜெட் பற்றி புரிந்து கொள்ளும் திறன் இல்லாமல், பட்ஜெட் குறித்து பொய் சொல்லுவார்கள் என்பது எதிர்பார்த்ததுதான் என குறிப்பிட்டுள்ளார். 

Similar News