தி.மு.க'வினருக்கு இந்தியன் என்கிற உணர்வு அற்று போய்விட்டதா?

தி.மு.க'வினருக்கு இந்தியன் என்கிற உணர்வு அற்று போய்விட்டதா?

Update: 2021-02-04 12:45 GMT

இந்தியாவையும், இந்திய இறையாண்மை இழிவுபடுத்துதும் அயல்நாட்டு பிரபலங்களை  சமூக வலைதளங்களில் கொண்டாடும் மனோபாவத்தில் தி.மு.க ஆதரவு சமூக வலைதள ஆதரவாளர்கள் உள்ளனர். இதன் காரணமாக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சர்வதேச பிரபலங்கள் கருத்து தெரிவித்ததற்கு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கண்டனம் தெரிவித்துள்ளார் இதனால் சச்சின் டெண்டுல்கரை விமர்சிக்க துவங்கியுள்ளனர்.

இது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார். அதில், "இந்தியாவின் இறையாண்மை காப்பதில் சமரசம் செய்ய முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டு பிரபலங்கள் பார்வையாளர்களாக இருக்கலாம், ஆனால் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட முடியாது" என காட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும், "இந்தியாவை பற்றி இந்தியர்களுக்கு தெரியும் என்றும், இந்தியர்களே முடிவு எடுப்பார்கள்" எனவும் பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் ரோகித் ஷர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா போன்ற  கிரிக்கெட் பிரபலங்கள் இந்தியாவிற்கு ஆதரவான பதிவிட்டுள்ளதையும் தி.மு.க ஆதரவு சமூக வலைதள ஐடிக்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்தியாவை ஆதரிப்பது, இந்திய இறையாண்மையை காப்பது போன்ற பதிவுகளை எந்த பிரபலங்கள் வெளியிட்டாலும் அதனை எதிர்க்கும் மனநிலையில் தி.மு.க ஆதரவு ஐடிக்கள் இருப்பது இவர்கள் இந்தியாவிற்கும், இந்திய இறையாண்மைக்கும் எதிரான மனநிலையில் இருப்பார்களோ என தோன்றுகிறது.

Similar News