டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்த டி.ஆர்.பாலு - தி.மு.கவிற்கு தோல்வி பயம் துவங்கிவிட்டதா?

டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்த டி.ஆர்.பாலு - தி.மு.கவிற்கு தோல்வி பயம் துவங்கிவிட்டதா?

Update: 2020-12-03 06:30 GMT

வரும் தேர்தலை தி.மு.க பயத்துடனே எதிர்கொள்ளவிருக்கிறது அதன் காரணமாக சுற்றுப்பயணங்களும், அறிக்கைகள் மேல் அறிக்கைகளும், ஆளும் அரசுகள் ஏதாவது செய்துவிடுமோ என்ற பயத்தில் புகார்களும் அளித்து வருகின்றது. அந்த வகையில் டெல்லி தலைமை  தேர்தல் ஆணையத்தில் தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு ஒரு புகார் அளித்துள்ளார். 

டெல்லியில் நேற்று தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு வந்திருந்த தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு, தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை மனுவை அளித்தார். அதில், "மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள், நேரடியாக தேர்தலில் ஓட்டளிக்கும் நடைமுறை இருந்து வந்தது. ஆனால்  தற்போது, இந்த நடைமுறைக்கு பதிலாக, அவர்களுக்காக, தபால் ஓட்டு போடும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது.

கடந்த பீகார் சட்டப்பேரவைத் தேர்தலின்போது அமலுக்கு வந்த இந்த நடைமுறையை, தமிழக சட்டப்பேரவை தேர்தலிலும் பின்பற்ற  தேர்தல் ஆணையம் திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் தெரிகிறது. இந்த முறையானது நேர்மையாக ஓட்டளிக்கும் முறைக்கு எதிரானதாகும். கள்ள ஓட்டுகள் போடுவதற்கே இது வழிவகுக்கும். முறைகேடான வழிகளுக்கு, நிறைய வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் என்பதால், இந்த தபால் ஓட்டுமுறையை கைவிட வேண்டும்" என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டி.ஆர்.பாலு கூறியதாவது, "ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மீது, ஏற்கனவே விமர்சனங்கள் உள்ளன. இயந்திரங்கள் குறித்து, ஒவ்வொரு தேர்தலிலும், அதிக அளவில் முறைகேடுகள் நடப்பதாக, புகார்கள் வருகின்றன. இந்நிலையில், தபால் ஓட்டு முறையை அமல்படுத்துவதன் வாயிலாக, மேலும் பல முறைகேடுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது" என தெரிவித்தார்.

தோல்வி பயம் தி.மு.க'விற்கு தற்பொழுதே தெரிய துவங்கியுள்ளன.

Similar News