"இவர்கள் இருக்கும்வரை இந்தியர்கள் பயம் கொள்ளத் தேவையில்லை" - லடாக் எம்.பி அதிரடி!

"இவர்கள் இருக்கும்வரை இந்தியர்கள் பயம் கொள்ளத் தேவையில்லை" - லடாக் எம்.பி அதிரடி!

Update: 2020-12-25 17:15 GMT
நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் ராஜ்நாத் சிங் மூவரும் மத்திய அரசின் ஒரு பகுதியாக இருக்கும் வரை இந்திய மக்கள் எல்லை குறித்து கவலைப்படத் தேவையில்லை என்று கூறிய லடாக் எம்.பி, மேலும், பிரதமர் மோடியின் தலைமையில் லடாக் பாதுகாப்பாக இருப்பதாக வலியுறுத்தினார்.

ஊடகங்களுடன் பேசிய லடாக் எம்.பி. ஜமியாங் செரிங் நம்கியால் கூறுகையில், "மோடி ஜி, அமித் ஷா ஜி மத்திய அரசிலும், ராஜ்நாத் சிங் பாதுகாப்பு அமைச்சராகவும் இருக்கும் வரையில், இந்திய மக்கள் கவலைப்பட தேவையில்லை” என்று கூறினார்.

"எல்லைப் பகுதிகளில் இந்த அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளால், அது லடாக் அல்லது அருணாச்சல பிரதேசமாக இருந்தாலும், ஒரு அங்குல நிலம் கூட வெளிநாட்டினரால் ஆக்கிரமிக்க முடியாது" என்று அவர் மேலும் கூறினார். சீன இராணுவம் அனுப்பிய சமரச திட்டத்தை இந்தியா மறுத்துவிட்டதாகவும், லடாக் உள்ளூர் மற்றும் மக்கள் பிரதிநிதியாக, அண்டை நாடுகளால் சில காலமாக அவர் அதிக எதிர்ப்புகளைக் கண்டு வருவதாக தொடர்ந்து கூறினார்.

மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், "முதல் முறையாக, பிரதமர் மோடியின் தலைமையில், லடாக் மக்கள் பாதுகாப்பாக உணர்கிறார்கள்" என்று ஜமியாங் செரிங் நம்கியால் கூறினார்.

Similar News