பாஜகவில் இணைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பேரன் !

முன்னாள் குடியரசுத் தலைவர் கியானி ஜெயில் சிங்கின் பேரன் இந்திரஜித் சிங் பாஜகவில் இணைத்துக்கொண்டார்.

Update: 2021-09-14 06:52 GMT

முன்னாள் குடியரசுத் தலைவர் கியானி ஜெயில் சிங்கின் பேரன் இந்திரஜித் சிங் பாஜகவில் இணைத்துக்கொண்டார்.

இந்தியாவின் 7வது குடியரசுத் தலைவரும் இந்திரா காந்தியின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பதவி வகித்தவர் கியானி ஜெயில் சிங்.

இந்நிலையில், கியானி ஜெயில் சிங் பேரன், இந்திரஜித் சிங் டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி முன்னிலையில் தன்னை அக்கட்சியில் இணைத்துக்கொண்டார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, காங்கிரஸ் கட்சி தனது தாத்தாவை எப்படி எல்லாம் நடத்தியது என்று அனைவரும் அறிந்ததே. மேலும் அவர் விபத்தில்தான் இறந்தாரா என்பதும் தெரியவில்லை என்றார்.

ஜெயில்சிங் கடந்த 1994ம் ஆண்டு தனது 78வது வயதில் சாலை விபத்து ஒன்றில் சிக்கி படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Puthiyathalamurai


Tags:    

Similar News