நேபாள - இந்திய உறவில் முன்னேற்றம்.. இடையூறு செய்யும் சீனா?

நேபாள - இந்திய உறவில் முன்னேற்றம்.. இடையூறு செய்யும் சீனா?

Update: 2020-12-02 13:29 GMT

கடந்த சில மாதங்களாக மோசமடைந்து வந்த இந்திய நேபாள உறவுகள் மறுபடியும் முன்னேற்றமடையத் துவங்கியுள்ளன. நேபாள பிரதமர் ஓலியின் அரசாங்கம் இந்தியாவுடனான தனது உறவில் முன்னேற ஆர்வமாக உள்ளது எனக் கூறப்படுகிறது. 

இந்திய வெளியுறவுச் செயலாளர் ஹர்ஷ்வர்தன் ஸ்ரீங்கிளா தனது இரண்டு நாள் பயணத்தில் நவம்பர் 26 ஆம் தேதி, பிரதமர் ஓலியுடன் தனியாக 50 நிமிட உரையாடலை மேற்கொண்டார்.

 இரு நாடுகளின் எல்லை பிரச்சனை உள்ளிட்ட சில பிரச்சனைகள் அங்கே விவாதிக்கப்பட்டு முடிவுகள் எட்டப்படுவதற்கான முதல் படியாக இந்த சந்திப்புகள் அமைந்துள்ளன. நேபாள வெளியுறவு அமைச்சர் பிரதீப்குமார் காவாலி டிசம்பரில் இந்தியாவில் வருகை தருவதற்கான தேதிகள் தயாரிக்கப்படுகின்றன.

 இந்தியாவைச் சேர்ந்த சில பகுதிகளை நேபாளம் தன்னுடைய வரைபடத்தில் சேர்த்த பிறகு இருதரப்பு உறவுகளும் மோசமடைந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்களுக்கு சீனா கண்டிப்பாக ஏதாவது ஒரு வகையில் இடையூறு செய்யும் என்ற கவலைகளும் உள்ளன.

 நேபாளத்தின் அரசியல் மற்றும் பொருளாதாரத்தின் மீது சீனா செல்வாக்கு செலுத்துகிறது என்பதை இரு நாடுகளும் அறிந்தே உள்ளன. நேபாளத்தின் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக உடைவதை சீனா விரும்பாது என்று கூறப்படுகிறது.

 கடந்த காலங்களில் பிரதமர் ஓலி மற்றும் முன்னாள் நேபாள பிரதமர் பிரச்சந்தா தலைமையிலான  இரு பிரிவுகளுக்கு இடையே பிளவுகளை தீர்க்க சீனா நடவடிக்கை எடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய்ங் கடந்த ஞாயிற்றுக்கிழமை நேபாளத்திற்கு வந்ததையும் தனது பயணத்தின் பொழுது பிரதமர் ஓலி, நேபாள ஜனாதிபதி மற்றும் நேபாள ராணுவ தலைவர் ஆகியோருடனான சந்திப்புகளை  நடத்திய பிறகு பாகிஸ்தானுக்கு சென்றார்.

இந்த மாத தொடக்கத்தில் சீன தூதரிடத்தில் பிரதமர் ஓலி, தனது நாடு மற்றும் தனது கட்சி பிரச்சினைகளை தானே கையாள முடியும் என்றும், அதற்கு மற்ற நாடுகளின் உதவி என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.

 ஆனால் இதே நிலையில் நேபாள பிரதமர் தொடர்ந்து நீடிக்க முடியுமா என்பது சந்தேகமே. சீனாவிற்கு நேபாள கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றாக இருக்க வேண்டும், அதன் மூலமாக மட்டுமே நேபாளம் இந்தியாவிற்கு எதிராக இருக்கும். 

இந்தியாவுடன் இப்போது சமாதானத்தை விரும்பும் பிரதமர் ஓலியை கட்சியிலிருந்தும் ஆட்சியிலிருந்தும் வெளியேற்றிவிட வேண்டும் என்று சீனா விரும்புவதாகக் கூறப்படுகிறது.

Similar News