திகார் ஜெயிலுக்கு மீண்டும் செல்லும் கனிமொழி, ராஜா.? ஜனவரியில் விசாரிக்கப்படும் 2ஜி ஊழல் வழக்கு.!

திகார் ஜெயிலுக்கு மீண்டும் செல்லும் கனிமொழி, ராஜா.? ஜனவரியில் விசாரிக்கப்படும் 2ஜி ஊழல் வழக்கு.!

Update: 2020-12-02 06:52 GMT

கடந்த 2006 முதல் 2014ம் ஆண்டு வரை காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடைபெற்றது. அப்போது ‘2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வதில் லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு பணம் மோசடி நடந்துள்ளதாக விசாரணை மூலம் தெரியவந்தது.


இதனிடையே சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குகளை தொடர்ந்தது. இந்த வழக்கில், திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, மற்றும் எம்.பி., கனிமொழி உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.


இந்த வழக்குகளை விசாரித்த, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி அனைவரையும் விடுவித்து தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மீண்டும் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை, நீதிபதி பிரிஜேஷ் சேத்தி, தினசரி விசாரித்து வந்தார். நவம்பர் 30ம் தேதி அவர் ஓய்வு பெற்றார். இதனையடுத்து இந்த வழக்கானது நீதிபதி யோகேஷ் கன்னாவுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. 


அப்போது, இந்த மாதத்தில் இருந்து விசாரணையை நடத்த வேண்டும் என சி.பி.ஐ., சார்பில் வலியுறுத்தப்பட்டது. போதிய அவகாசம் இல்லாத காரணத்தால் அடுத்தாண்டு, ஜனவரி 13, - 15ம் தேதிக்குள் விசாரணையை துவக்குவதாக, நீதிபதி தெரிவித்துள்ளார்.


எனவே இந்த விசாரணை நடைபெற்று மீண்டும் கனிமொழி மற்றும் ராசா குற்றவாளி என தீர்ப்பு வந்தால் பழைய மாதிரி அவர்கள் திகார் ஜெயிலுக்கு செல்ல வேண்டியது என்று அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர். அடுத்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றியை இழப்பதற்கு இந்த தீர்ப்பும் ஒரு காரணமாக அமையலாம் என கூறப்படுகிறது.
 

Similar News