செக் மோசடி: 3 முறை டிமிக்கி கொடுத்த தி.மு.க. எம்.எல்.ஏ.விற்கு பிடிவாரண்ட்!
கரூரை சேர்ந்தவர் ராசம்மாள் என்பவரிடம் ரூ.10 லட்சத்திற்கான செக்கை கொடுத்த திமுக எம்.எல்.ஏ., மாணிக்கம் பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் 3 முறை சம்மன் அனுப்பப்பட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் ஏமாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், செக் மோசடியில் ஈடுபட்ட குளித்தலை திமுக எம்.எல்.ஏ., மாணிக்கத்திற்கு மீண்டும் 4வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் ஆஜராகாமல் ஏமாற்றி வந்த நிலையில் நீதிமன்றம் பிடிவாரண்டை அதிரடியாக பிறப்பித்துள்ளது. இந்த பிடிவாரண்டால் அவர் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.
ஆளும் கட்சி எம்.எல்.ஏ., என்பதால் போலீசார் அவரை கைது செய்யாமல் இருக்கவும் வாய்ப்பு இருப்பதாக பேசப்படுகிறது. எது எப்படியோ குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை.
Source: Asianetnews
Imaeg Courtesy: Vikatan