22 வயது RSS தொண்டர் படுகொலை! SDPI கட்சியை தடை செய்ய வலுக்கும் கோரிக்கை!

22 வயது RSS தொண்டர் படுகொலை! SDPI கட்சியை தடை செய்ய வலுக்கும் கோரிக்கை!

Update: 2021-02-25 17:24 GMT

கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் புதன்கிழமை இரவு ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் (RSS) தொண்டர் ஒருவர் கொல்லப்பட்டார்.
 

செர்தலா அருகே நாகம்குளங்கராவில் RSS மற்றும் SDPI கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதலில் ராகுல் கிருஷ்ணா என்ற RSS தொண்டர் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
 

இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (SDPI) என்பது இஸ்லாமிய அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் (PFI) அரசியல் பிரிவு ஆகும்.
 

காசர்கோடு முதல் திருவனந்தபுரம் வரை 'விஜய யாத்திரையை' வழிநடத்தும் பா.ஜ.க கேரள மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன், ஆர்.எஸ்.எஸ் தொண்டர் கொல்லப்பட்டதைக் கண்டித்தார். இந்தக் கொலைக்குப் பின்னால் ஒரு தீவிர இஸ்லாமிய அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) இருப்பதாகக் குற்றம் சாட்டினார்.
 

ஊடக செய்திகளின் படி, எட்டு SDPI உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் போலீசாரின் கூற்றுப்படி அவர்கள் நேரடியாக இந்த கொலையில் ஈடுபட்டுள்ளனர்.
 

இதற்கிடையில், ஆர்.எஸ்.எஸ்.தொண்டர் கொல்லப்பட்டதற்கு  எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அலப்புழா மாவட்டத்தில் பா.ஜ.க மற்றும் இந்து அமைப்புகள் ஸ்ட்ரைக் நடத்த அழைப்பு விடுத்துள்ளன.
 

செர்தலா காவல் துறையின் கூற்றுப்படி, SDPI நாகம்குளங்கராவில் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது, இதன் போது  SDPI தலைவர்கள் தூண்டிவிடும் படி பேச்சுக்களை பேசியதாகக் கூறப்படுகிறது, அதைத் தொடர்ந்து RSS  ஆர்வலர்கள் அந்த இடத்தில் கூடினர். இந்த சம்பவம் நடந்த உடனேயே மோதல்கள் நடந்தன.
 

சமீபத்தில் பெங்களூரு கலவரம் குறித்து விசாரிக்க உண்மை கண்டறியும் குழுவின் தலைவராக இருந்த முன்னாள் கர்நாடக அமைச்சர் அரவிந்த் லிம்பாவலி, இந்திய சமூக ஜனநாயகக் கட்சிக்கு  (SDPI) தடை விதிக்க அம்மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியது குறிப்பிடத்தக்கது.  

Cover Image credit: twitter/ @satyakumar_y
 

Similar News