வேல் யாத்திரைக்கு சென்ற குஷ்பு கார் விபத்து.. முருகன் அருளால் தப்பித்தேன் என்று ட்விட்.!

வேல் யாத்திரைக்கு சென்ற குஷ்பு கார் விபத்து.. முருகன் அருளால் தப்பித்தேன் என்று ட்விட்.!

Update: 2020-11-18 12:04 GMT

பாஜக சார்பில நடத்தப்படும் வேல் யாத்திரை நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னையில் இருந்து கடலூருக்கு வேல் யாத்திரையில் பங்கேற்பதற்காக நடிகை குஷ்பு இன்று காரில் புரப்பட்டு சென்றார். அப்போது செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே நடிகை குஷ்பு சென்ற கார் முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

பாண்டிச்சேரி நோக்கிச் சென்ற கண்டெய்னர் லாரி ஒன்று குஷ்பு சென்ற கார் மீது மோதியது தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் கார் பலத்த சேதமடைந்தது. காரின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இதில் குஷ்பு லேசான கயாத்துடன் உயிர் தப்பினர்.


இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தான் தனது கணவர் கும்பிடும் கடவுள் முருகன் அருளினால் தப்பியதாக கூறினார்.
இந்த விபத்து தொடர்பாக குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். காரின் படத்தையும் சேர்த்து வெளியிட்டுள்ளார். விபத்து நடந்தும் அவர் மீண்டும் வேல் யாத்திரைக்காக சென்ற சம்பவம் பாஜகவினருக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது என்றே சொல்லலாம்.

Similar News