'கொங்குநாடு' தருமபுரி மாவட்ட பா.ஜ.க., தீர்மானம்.!

மேற்கு மாவட்டங்களை ஒன்றிணைத்து கொங்குநாடு என்ற தனி மாநிலம் உருவாக்கப்பட வேண்டும் என தருமபுரி மாவட்ட பாஜக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

Update: 2021-07-14 09:18 GMT

மேற்கு மாவட்டங்களை ஒன்றிணைத்து கொங்குநாடு என்ற தனி மாநிலம் உருவாக்கப்பட வேண்டும் என தருமபுரி மாவட்ட பாஜக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

தமிழகத்தில் இருந்து மேற்கு மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை, திருப்பூர், சேலம், கரூர், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கி கொங்குநாடு என்று புதிதாக உருவாக்க வேண்டும் என்பது இந்த மாவட்ட மக்களின் கோரிக்கையாக உள்ளது. 


இந்நிலையில், தருமபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் மாவட்ட பாஜக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தருமபுரி மாவட்ட பாஜக தலைவர் அனந்தகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் மேற்கு மாவட்டங்களை ஒன்றிணைத்து கொங்குநாடு தனியாக உருவாக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

இந்த கூட்டத்தில் பிரச்சார பிரிவு மாவட்ட தலைவர் ஆர்.பி.ஆறுமுகம், மாவட்ட துணைத் தலைவர் சி.மணி, முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.ஏ.வரதராஜன், வேலூர் மாவட்ட முன்னாள் மேயர் பிரியதர்ஷினி, மற்றும் மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Similar News