திருத்தணியில் சங்கமித்த பா.ஜ.க தலைவர்கள் - தமிழக அரசியல் களத்தில் அடித்து ஆட ஆயத்தமாகும் எல்.முருகன்!

திருத்தணியில் சங்கமித்த பா.ஜ.க தலைவர்கள் - தமிழக அரசியல் களத்தில் அடித்து ஆட ஆயத்தமாகும் எல்.முருகன்!

Update: 2020-11-06 13:08 GMT

பா.ஜ.க தலைவர் எல்.முருகன் தான் மேற்கொள்ள இருந்த வேல் யாத்திரை குறித்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பொது வெளியில் தெரிவித்து வந்தார். இந்நிலையில் கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி அனுமதிக் கோரி டி.ஜி.பி அலுவலகத்தை நாடிய போது அந்தந்த பகுதிகளில் உரிய அனுமதியை பெற்று யாத்திரையை நடத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டதாக நேற்று பா.ஜ.க தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க முடியாது என தமிழக அரசு சென்னை உச்சநீதிமன்றத்தில் அறிவித்தது.

இதனால் வேல் யாத்திரை நிறுத்தப்படும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், திட்டமிட்டப்படி எல்.முருகன் இன்று காலை சென்னையில் இருந்து திருத்தணியை சென்றடைந்துள்ளார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன், "திருத்தணியில் கடவுள் முருகனை வழிபடுவது என்பது எனது அடிப்படை உரிமை, அதை யாரும் தடுக்க முடியாது" என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து தற்போது பா.ஜ.க மூத்த தலைவர்களான பொன் இராதாகிருஷ்ணன், சி.பி.இராதாகிருஷ்ணன், கே.எஸ்.நரேந்திரன், நைனார் நாகேந்திரன் என அனைவரும் திருத்தணியில் கூடியுள்ளதால் தமிழக அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது. இவர்கள் போக, அகில பாரத பொதுச்செயலாளர் சி.டி.ரவி, மத்திய உள்த்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி ஆகியோரும் திருத்தணியில் தற்போது உள்ளனர்.

தடையை மீறி எல்.முருகன் தனது யாத்திரையை துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த பட்சத்தில் எல்.முருகன் தமிழக அரசியல் களத்தில் அடித்து ஆட ஆரம்பித்துள்ளார் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

Similar News