சிறையில் இருந்தும் திருந்தவில்லை.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய லாலு பிரசாத்.. விசாரணைக்கு உத்தரவு.!

சிறையில் இருந்தும் திருந்தவில்லை.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய லாலு பிரசாத்.. விசாரணைக்கு உத்தரவு.!

Update: 2020-11-27 09:47 GMT

சிறையில் உள்ள ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், பா.ஜ.க.,  எம்.எல்.ஏக்களிடம் தொலைபேசி வாயிலாக குதிரை பேரத்தில் ஈடுபட்ட விவகாரம் தொடர்பாக, விசாரணை நடத்தும்படி, ஜார்க்கண்ட் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்சா ஆட்சி நடக்கிறது. 


அண்டை மாநிலமான பீஹார் சட்டசபைக்கு சில வாரங்களுக்கு முன்பு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. இதனிடையே நிதிஷ் குமார் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

இந்நிலையில், சட்டசபை சபாநாயகர் தேர்தல், நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், பா.ஜ.,வை சேர்ந்த் விஜய்குமார் சின்ஹா வெற்றி பெற்றார். ராஷ்ட்ரீய ஜனதா தளம் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஆவாத் பீஹாரி சவுத்ரி தோல்வியை சந்தித்தார்.


சபாநாயகர் தேர்தலுக்கு முந்தைய நாள் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், பா.ஜ. எம்.எல்.ஏ., லாலன் பஸ்வானை, தொலைபேசியில் அழைத்து, சபாநாயகர் தேர்தலை புறக்கணிக்கும்படியும், இந்த ஆட்சியை கலைத்த பின்னர் அமைச்சர் பதவி தருவதாக பேசுகின்ற ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாட்டு தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று லாலு பிரசாத் தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிர்சா முண்டா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உடல்நல பாதிப்பு  காரணமாக, அம்மாநிலத்தில் உள்ள, ரிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


இந்நிலையில், அவர் தொலைபேசி வாயிலாக குதிரை பேரத்தில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி, ராஞ்சி துணை கமிஷனர், எஸ்.பி., மற்றும் சிறைத்துறை எஸ்.பி., ஆகியோருக்கு, ஜார்க்கண்ட் டி.ஜி.பி., வீரேந்திரா பூஷண் உத்தரவிட்டுள்ளார்.


சிறை விதிமுறைகளை, லாலு பிரசாத் அடிக்கடி மீறுவதாக குற்றச்சாட்டு எழுவதை தொடர்ந்து, இந்த வழக்கை, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் எனவும், பொதுநல மனுதாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் தற்போது வெளியாகியுள்ளது. சிறையில் இருந்தாலும் லாலு திருந்தவில்லை என்று பீகார் மாநில பாஜக கூறியுள்ளது. தற்போது இவருக்கு கூடுதல் தண்டனை கிடைக்கவும் வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.
 

Similar News