காங்கிரசுக்கு சீட் கொடுத்தால் டெபாசிட் கூட தேறாது ! பங்கம் செய்யும் லல்லுபிரசாத் யாதவ்!

பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு சீட் கொடுத்தால் டெபாசிட் கூட தேறாது என்று ராஷ்டிரீய ஜனதாதளம் கட்சியின் தலைவர் லல்லுபிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.

Update: 2021-10-25 04:45 GMT

பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு சீட் கொடுத்தால் டெபாசிட் கூட தேறாது என்று ராஷ்டிரீய ஜனதாதளம் கட்சியின் தலைவர் லல்லுபிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார். பீகார் மாநிலத்தில் கடந்த நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், ராஷ்டிரீய ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிலையில் படுதோல்வியை சந்தித்து. காங்கிரஸ் கட்சிக்கு அதிகமான இடங்களை ஒதுக்கியும் வெற்றிபெறவில்லை என்று கூறப்பட்டது.

இதனிடையே பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் வெற்றி பெற்றிருந்த நிலையில், 2 எம்.எல்.ஏ.க்கள் மரணம் அடைந்ததால் காலியாக உள்ள அந்த தொகுதிகளுக்கு 30ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குஷேஷ்வர், அஸ்தான் என்ற தொகுதி கடந்த ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்டு படுதோல்வியை சந்தித்தது. எனவே அந்த தொகுதியை காங்கிரஸ் கட்சி மீண்டும் எதிர்பார்த்தது. ஆனால் அக்கட்சிக்கு ஒதுக்காமல் ராஷ்டிரீய ஜனதாதளளே அங்கு போட்டியிடும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக இரண்டு கட்சிகளிடையிலான கூட்டணி முறிந்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சிறையில் இருந்து வெளிவந்த பின்னர் டெல்லியில் தங்கி சிகிச்சை பெற்று வரும் ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லல்லு பிரசாத் யாதவர் நேற்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு தொகுதி ஒதுக்காதது ஏன்? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு லல்லு பிரசாத், காங்கிரஸ் தோற்பதற்கு நாங்கள் ஏன் தொகுதி ஒதுக்க வேண்டும். அப்படி ஒதுக்கினால் டெபாசிட்டை கூட இழந்து விடும் என்று பதில் அளித்தார்.

Source, Image Courtesy: Maalaimalar



Tags:    

Similar News