தமிழகத்தில் பா.ஜ.கவின் வளர்ச்சி இதுதான்.. பாயிண்டாக அடித்த பா.ஜ.க பிரமுகர் பிரதீப்..

Update: 2024-06-24 10:10 GMT

18-வது லோக்சபா தேர்தல் நாடு முழுவதும் 543 தொகுதிகளில் பல்வேறு கட்டங்களாக ஏப்ரல் 19-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை நடைபெற்றது. இதனையடுத்து அனைத்து தொகுதிகளின் வாக்குகளும் எண்ணப்பட்டது. ஆட்சியமைக்க 272 எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) 293 தொகுதிகளில் வெற்றிபெற்று அதிக பெரும்பான்மையை பெற்றது. இதனையடுத்து பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 3வது முறையாக பதவியேற்றது.


இந்த நிலையில், தமிழகத்தில் பாஜக வளராது, ஒத்த ஒட்டு கட்சி, நோட்டா கட்சி என்றெல்லாம் எதிர்க்கட்சியினர் கூறி வந்தார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் தலைமையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்திலிருந்து மூன்றாவது பெரும்பான்மை இடத்திற்குள் பாஜக நுழைந்து இருக்கிறது. கடந்த காலங்களில் தமிழகத்தில் பாஜக இருந்ததை காட்டிலும், தற்போது மக்களுக்கு மிகவும் பரிச்சயமான வகையில் பாஜகவினர் மக்களை நெருங்கிக் கொண்டு வருகிறார்கள் என்பதில் எந்த விதமான சந்தேகமும் கிடையாது. அந்த வகையில் தமிழக மக்களும் பாஜகவிற்கு தங்களுடைய வாக்குகளை கொடுத்து இருக்கிறார்கள்.


இதன் காரணமாக, தமிழக பாஜக டேட்டா மேனேஜ்மென்ட் செல் பிரிவு சார்பில், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க எந்த வகையில் எல்லாம் மக்களை சென்றடைந்து இருக்கிறது? என்பது தொடர்பான விவரங்கள் தற்போது வெளிவந்து இருக்கிறது. இதுகுறித்து பா.ஜ.கவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் பிரதீப் அவர்கள் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், "தமிழக பா.ஜ.க டேட்டா மேனேஜ்மென்ட் செல் பிரிவு தலைவர் திரு.மகேஷ்குமார் மற்றும் திரு.சூர்யநாராயணன் தலைமையில் நடைபெற்ற 2024 தேர்தல்கள் முடிவு பகுப்பாய்வு விவரங்கள் தற்போது வெளிவந்து இருக்கிறது. இதில் தமிழகத்தில் உள்ள 28 சட்டமன்றத் தொகுதிகளில் பா.ஜ.க கூட்டணி 40% வாக்குகளைப் பெற்றுள்ளது. மேலும் பா.ஜ.க கூட்டணி 79,44,680 வாக்குகள் பெற்று உள்ளது. 78 சட்டமன்றத் தொகுதிகளில் பா.ஜ.க கூட்டணி இரண்டாவது இடத்தைப் பிடித்து இருக்கிறது" என்று அவர் பதிவிட்டு இருக்கிறார்.

Input & Image courtesy:News

Tags:    

Similar News