"லயோலா கல்லூரியில் படிக்காமல் போய்விட்டேனே" - ஏங்கி தவித்த முதல்வர் ஸ்டாலின் !

Update: 2021-10-16 10:30 GMT

"லயோலா கல்லூரியில் நான் படிக்காமல் போய் விட்டேனே என்ற ஏக்கம் எனக்கு இப்போது வந்திருக்கிறது" என தமிழக முதல்வர் ஸ்டாலின் உருகியுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில், மேலாண்மை கல்வி நிறுவனத்தின் புதிய கட்டிடத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, "தி.மு.க'வுக்கும் இந்த கல்லூரிக்கும், மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதிக்கும் இந்த கல்லூரிக்கும் மிகப்பெரிய தொடர்பு உண்டு என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

கலைஞருடைய குடும்பத்தில் இருந்து என் அண்ணன் அழகிரி லயோலா கல்லூரியில் தான் படித்தார். அதேபோல என் மகன் உதயநிதி ஸ்டாலினும் இந்த கல்லூரியில் தான் படித்தார், முரசொலி மாறனின் மூத்தமகன் கலாநிதி மாறன் இங்குதான் படித்தார், அதேபோல தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் தம்பி தயாநிதி மாறனும் இந்த கல்லூரியில் படித்தார், ஆனால் இந்த கல்லூரியில் நான் படிக்காமல் போய் விட்டேனே என்ற ஏக்கம் எனக்கு இப்போது வந்துள்ளது. அந்த ஏக்கம் ஒரு பக்கம் இருந்தாலும், இந்த கல்லூரியில் என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும், தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடக்கும்போதெல்லாம், ரிசல்ட் எப்போது வரும் என்று லயோலா கல்லூரியின் வாசலில்தான் நாங்கள் காத்துக் கொண்டிருப்போம். நான் ஒவ்வொரு முறையும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட போதும் லயோலா கல்லூரியில் வாக்கு என்னப்பட்டு இங்கிருந்துதான் அறிவிப்புகள் வரும், இப்போது நான் முதலமைச்சராக இருக்கிறேன் என்றால், இந்த லயோலா கல்லூரியில்தான் ஓட்டு எண்ணப்பட்டு இங்கிருந்து தான் நான் வெற்றி பெற்றதாக அறிவிப்பு வந்தது. அதன் பிறகுதான் நான் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டேன்" என கூறினார்.


Source - Asianet NEWS

Similar News