ஆன்மிகத்தில் நம்பிக்கை இருப்பதால் ராஜபாளையத்தில் போட்டியிடுகிறேன்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.!

நான் முயற்சி எடுத்தேன்.. இறைவன் முடிவெடுத்தான். ராஜபாளையம்.. ராஜேந்திரபாலாஜி.. இயற்கையாகவே அமைந்துள்ளது.

Update: 2021-03-25 03:55 GMT

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி களம் இறங்கியுள்ளார்.

தேர்தல் பரப்புரையில் நான் ஏன் ராஜபாளையத்தில் போட்டியிடுகிறேன் என்று கூறியதாவது: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் போன்று, பல்வேறு கட்டமைப்புகளுடன், இந்த ராஜபாளையம் நகரம் அமைந்துள்ளது.

நான் திருவண்ணாமலையில் ஒரு சாமியாரை சந்தித்த போது அவர், 'நீங்கள் ரா என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் தொகுதியில் நில்லுங்கள்' என்று கூறி ஆசி வழங்கினார். நான் முயற்சி எடுத்தேன்.. இறைவன் முடிவெடுத்தான். ராஜபாளையம்.. ராஜேந்திரபாலாஜி.. இயற்கையாகவே அமைந்துள்ளது.




 


ஆன்மிக நம்பிக்கை உள்ளவர்களிடம் மட்டுமே 'பக்தியும் கடவுளும் இருப்பார்' என நம்புபவன் நான். ஆன்மிக நம்பிக்கை உடையவர்கள் பாவம் செய்ய மாட்டார்கள். கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் பாவம் செய்வதற்கு தயங்கமாட்டார்கள்.

ராஜபாளையம் நகரம் ஒரு அற்புதமான நகரம். எனக்குப் பிடித்த ஆன்மிக நகரம். இவ்வாறு அவர் பேசினார். இந்து மதத்தின் மீது மிகவும் மரியாதை வைத்துள்ளவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, இதன் காரணமாகவே மக்கள் அவருக்கு செல்லும் இடமெல்லாம் ஆதரவு அளித்து வருகின்றனர்.

கடவுள் நம்பிக்கை இல்லாத கட்சியான திமுகவை மக்கள் முழுமையாக நிராகரிக்க தொடங்கியுள்ளனர். வரும் தேர்தலில் இந்துக்களின் ஓட்டு திமுக கூட்டணிக்கு விழாது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News