ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாடு!! பயங்கரவாதத்திற்கு எதிராக பிரதமர் மோடி கண்டனம்!!!

Update: 2025-09-01 09:07 GMT

 இந்தியா - காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட பகல்ஹாம் தாக்குதலில் 26க்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் உயிரை இழந்தனர், இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு 100 க்கும் அதிகமான நாடுகள் கண்டனங்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சமீபத்தில் நடந்து வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில், இந்திய பிரதமர் மோடி அவர்கள் தனது பேச்சின் போது பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கடுமையான கண்டனங்களை வெளிப்படையாக தெரிவித்தது மட்டுமல்லாமல் பயங்கரவாதம் என்பது நாட்டின் பாதுகாப்பிற்கு மட்டுமல்லாமல் மனித இனத்திற்கும் தீங்கு விளைவிக்கக் கூடியது என்று கூறியுள்ளார்.  


இது மட்டுமல்லாமல் பல நாடுகள் இன்னும் பயங்கரவாதத்தினை ஆதரித்து வருவதாகவும் குறிப்பிட்டார் அதை வன்மையாக கண்டித்தார் மற்றும் வாதத்திற்கு எதிரான கண்டனங்கள் தெரிவித்த அனைத்து நாடுகளுக்கும் நன்றிகள் தெரிவித்தார். 

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கடந்த 2001-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், ஈரான், பெலாரஸ் போன்ற நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

இந்த மாநாட்டில் பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் கலந்து கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News