பீகாரில் இரண்டு கம்யூனிஸ்டுகளையும் வீழ்த்தி தள்ளிய நோட்டா - ஐயோ பாவம் காம்ரேடுகள்!

பீகாரில் இரண்டு கம்யூனிஸ்டுகளையும் வீழ்த்தி தள்ளிய நோட்டா - ஐயோ பாவம் காம்ரேடுகள்!

Update: 2020-11-11 12:27 GMT

தமிழகத்தில் எந்த தொண்டர் பலமும் இல்லை என்றாலும் தி.மு.க அல்லது அ.தி.மு.க கட்சிகளுடன் சவாரி செய்து சொற்ப இடங்களில் கம்யூனிஸ்ட் கட்சிகள் வெற்றி பெரும். குறிப்பாக ஊடக விவாதங்களில் எப்போதும் கலந்துக் கொண்டு ஊருக்கு உபதேசம் செய்வதில் கம்யூனிஸ்டுகளை அடித்துக்கொள்ள ஆளே இல்லை.

ஆனால், பீகார் தேர்தலில் நோட்டாவை விட குறைந்த வாக்குகளை இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் சேர்ந்து பெற்றுள்ளது அவர்களது பரிதாப நிலையை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

பீகார் தேர்தலில் நோட்டா பெற்ற வாக்குகள் 7,06,252. 1.68%.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பெற்ற வாக்குகள் 3,49,489. 0.83%. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெற்ற வாக்குகள் 2,74,155. 0.65%

ஆக கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து 6,23,644 வாக்குகளை மட்டுமே பெற்று(1.48%) நோட்டாவை விட பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக கம்யூனிஸ்ட் பீரங்கிகளான அருணன், கனகராஜ், சிந்தன் ஆகியோர் என்ன கருத்து சொல்ல போகிறார்கள் என சமூக வலைதளங்களில் கம்யூனிஸ்டுகளை கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

Similar News