5 தொகுதிகளில் மட்டும் 43 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை: முடிவுகள் தெரியவருவதற்கு நள்ளிரவாகலாம்.!

75 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், சில தொகுதிகளில் 28 மேஜைகள் வரை அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2021-05-02 01:59 GMT

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக சில தொகுதிகளில் மட்டும் 43 சுற்றுகள் வரை வாக்குள் எண்ணப்படுவதால், முடிவுகள் தெரிவதற்கு காலதாமதம் ஆகும் என கூறப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கிடையே தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்றது. வாக்குப்பதிவின்போது வாக்காளர்களுக்கு கையுறை, முககவசம், சானிடைசர் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளுடன் வாக்குப்பதிவு நடைபெற்றது.


 



இந்நிலையில், இன்று 75 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், சில தொகுதிகளில் 28 மேஜைகள் வரை அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி சோழிங்கநல்லூர், ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், உத்திரமேரூர் ஆகிய 5 சட்டமன்ற 28 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

மேலும், கவுண்டம்பாளையம், ஆவடி, மதுரவாயல், மாதவரம், கரூர் ஆகிய தொகுதிகளில் 20 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

Similar News