ஊட்டி தொகுதி பா.ஜ.க வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு!

தேயிலைக்கு குறைந்தபட்ச விலையான 30 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்படும், சுற்றுலா தலமான ஊட்டியில் மல்டி பார்க்கிங் வசதி ஏற்படுத்தி தருவது உள்ளிட்ட 4 கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என அமைச்சரிடம் கூறியுள்ளேன்.

Update: 2021-04-02 10:58 GMT

நீலகிரி மாவட்டம், ஊட்டி சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக போஜராஜன் போட்டியிடுகிறார். அவர் ஊட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அச்சனக்கல், கெரடா, கம்மந்து, பாலடா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கூட்டணி கட்சிகளுடன் சென்று வீடு, வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


அதன் பின்னர் அவர் கூறும்போது: ஊட்டி தொகுதியில் தன்னை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் படுகரின மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும், ஊட்டியை உலக தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன்.

மேலும், தேயிலைக்கு குறைந்தபட்ச விலையான 30 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்படும், சுற்றுலா தலமான ஊட்டியில் மல்டி பார்க்கிங் வசதி ஏற்படுத்தி தருவது உள்ளிட்ட 4 கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என அமைச்சரிடம் கூறியுள்ளேன். தான் வெற்றிபெற்ற பின்னர் இந்த கோரிக்கைகள் அனைத்து நிறைவேற்ற உறுதுணையாக இருப்பேன் எனக் கூறினார்.


அவருடன் அதிமுக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் உடனிருந்தனர்.

Similar News