வேட்பாளர்கள் தேர்வு.. அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ் இன்று ஆலோசனை.!

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை இறுதி செய்வதற்காக இன்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அக்கட்சி மாவட்ட செயலாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.

Update: 2021-03-05 03:50 GMT

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை இறுதி செய்வதற்காக இன்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அக்கட்சி மாவட்ட செயலாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.

நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நேர்காணல் நடைபெற்றது. ஒரே நாளில் 8000க்கும் மேற்பட்டோர்களுடன் நேர்காணல் நடைபெற்றது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வேட்பாளர்களை இறுதி செய்வதற்கும், சட்டமன்ற தேர்தலில் சீட் யார் யாருக்கு கிடைக்கும் என்பன பற்றி ஆலோசனை நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் சீட் கிடைக்காதவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் சீட் அளிக்கப்படும் என்று மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடைபெறுகிறது.

மேலும், கூட்டணி கட்சியினருடன் ஒன்றிணைந்து அனைவரும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் உள்ளிட்டவையும் இதில் ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.

Similar News