மேலிடத்தின் உத்தரவு.. சொத்துக்களை அடமானம் வைத்து உதயநிதியின் பிரச்சாரத்திற்கு செலவு.. புலம்பும் சோழமண்டல நிர்வாகிகள்.!

மேலிடத்தின் உத்தரவு.. சொத்துக்களை அடமானம் வைத்து உதயநிதியின் பிரச்சாரத்திற்கு செலவு.. புலம்பும் சோழமண்டல நிர்வாகிகள்.!

Update: 2020-11-27 17:55 GMT

கொரோனா பெருந்தொற்று காலத்திலும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதியின் ஆடம்பரமான பிரச்சாரம், பொதுமக்களை முகம்சுழிக்க வைத்துள்ளது என்று திமுக நிர்வாகிகளை புலம்ப வைத்துள்ளது.


உதயநிதி பிரச்சாரத்தினால் சொத்துக்களை அடமானம் வைக்கும் அளவுக்கு போய்விட்டதாக புலம்பி தள்ளியுள்ளனர் டெல்டா மாவட்ட நிர்வாகிகள். 3 நாள் பிரச்சாரத்துக்குள்ளேயே 3 மாவட்ட நிர்வாகிகளை கதிகலங்க வைத்திருக்கிறார் உதயநிதி.

நமக்கு நாமே பிரச்சாரம் என்று உதயநிதி கிளம்பியுள்ளார். இதில் விதவிதமான துணிகளை போட்டுக்கொண்டு மக்களிடம் நடித்து வருகிறார். அப்போது விவசாயிகள், மீனவர்கள், வணிகர்கள் என்று டீக்கடை, காய்கறிகடை, கறிக்கடை என்று ஸ்டாலின் எப்படி ஒருத்தரை விடாமல் சந்தித்து தனது நடிப்பை வெளிப்படுத்தினாரோ அதே பாணியில் அவரது மகன் உதயநிதி எடுத்துள்ளார். அப்படித்தான் உதயநிதியும் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் பிரச்சார திட்டத்தின் மூலமாக விவசாயிகள், மீனவர்கள் என்று ஒருத்தரை விடாமல் சந்தித்து அவர்களது குறைகள் கேட்டறிந்து வருகிறார்.

முதலில் இந்த நிகழ்ச்சியை வரவேற்ற திமுக நிர்வாகிகள் தற்போது புலம்ப ஆரம்பித்துள்ளனர். இந்த திட்டத்திற்கு நாம் அவசரப்பட்டுவிட்டோமோ? என நகத்தைக் கடித்துக் கொண்டிருக்கும் நிலையை பார்க்க முடிகிறது.

இது தொடர்பாக சோழ மண்டலத்தைச் சேர்ந்த திமுக மா.செ. ஒருவர், ‘’இந்த வருடம் ஆரம்பத்திலிருந்து மூச்சு முட்டும் அளவிற்கு நிகழ்ச்சிகளை நடத்தி ஓய்ந்து போயிருக்கிறோம். இந்த லட்சணத்தில் உதயநிதி பிரச்சாரத்திற்கு பத்திரிகைகளில் விளம்பரங்களை கொடுக்கச் சொல்லி தலைமையிடமிருந்து தினமும் போன் வருகிறது. நாங்களும் வேற வழியின்றி பல ஆயிரங்களை செலவழித்து விளம்பரங்களை கொடுத்து வருகிறோம்.


உதயநிதி வாழ்த்து விளம்பரத்திற்காக மட்டும் சில கோடிகள் காலியாகி விட்டது. இது போக ஏகப்பட்ட பிரச்சார நிகழ்ச்சிகளையும் நடத்தச் சொல்லி உத்தரவு போட்டிருக்கின்றது தலைமை. உதயநிதி பிரச்சாரத்திற்கு பந்தா காட்ட வேண்டும் என்பதற்காக நாங்கள் எங்கள் சொத்து பத்திரங்களை அடமானம் வைத்து செலவுகள் சரியா என்று அதிகமாக கொதித்து விட்டார். 

மேலும், வீட்டு நெருக்கடிகளுக்கு எல்லாம் கூட அடமானம் வைக்காத சொத்து பத்திரத்தை தற்போது இந்த பிரச்சாரத்துக்காக வைக்கிறோம் என்கிறபோது மனசு வலிக்குது என்று புலம்பி தள்ளிவிட்டார். 

சோழ மண்டலத்து நிர்வாகிகளுக்கு ஏற்பட்ட கதிதான், நமக்கும் என்று கொங்கு மண்டல, பாண்டிய மண்டல நிர்வாகிகளும் பீதியில் உள்ளனர் எனவும் குறிப்பிட்டார். ஆட்சியை பிடிக்காத போதே திமுகவினர் செய்யும் அட்டூழியங்களை சகித்து கொள்ள முடியவில்லை. ஒரு வேளை ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தின் நிலைமை என்ன ஆகும் என்று மக்கள் புலம்புவதையும் காண முடிகிறது.
 

Similar News