அரசியல் பச்சோந்தி.. #ஐந்து_கட்சி_அமாவாசை செந்தில் பாலாஜியின் வரலாற்று சுருக்கம்.!

அரசியல் பச்சோந்தி.. #ஐந்து_கட்சி_அமாவாசை செந்தில் பாலாஜியின் வரலாற்று சுருக்கம்.!

Update: 2020-11-20 18:30 GMT

தமிழக அரசியல் கட்சியின் வரலாற்றில் அரசியல்வாதிகள் கட்சி மாறுவது என்பது இயல்பான ஒன்றுதான், தன் கொள்கையை விட்டுதர விருப்பமில்லாமல் கட்சி மாறியவர்கள் உண்டு, கட்சியின் தலைமை போக்கு பிடிக்காமல் கட்சி தாவியவர்கள் உண்டு, கட்சியின் கூட்டணி மற்றும் செயல்பாடுகள் ஒத்துவராமல் கட்சியை விட்டு விலகி சென்றவர்கள் உண்டு இப்படி தமிழக அரசியலில் கட்சி தாவலை மேற்கொண்ட அரசியல்வாதிகள் நிறைய! ஆனால் கட்சி தாவலை தன் வாழ்நாள் பிழைப்பாக வைத்து ஓட்டும் ஓர் பச்சோந்தியாக அறியப்படுபவர் வி.செந்தில் பாலாஜி என்கிற வி.செந்தில்குமார். கரூர் மாவட்டம் ராமேஸ்வரப்பட்டி எனும் கிராமத்தில் பிறந்தவர் இந்த அரசியல் பச்சோந்தி.

துவக்கத்தில் ம.தி.மு.க'வில் தனது அரசியல் வாழ்க்கையை துவங்கியவர். பின் ம.தி.மு.க - தி.மு.க - அ.தி.மு.க - அ.ம.மு.க - தி.மு.க கட்சிகளுக்கு மாறியதால் இன்று செல்லமாக நெட்டிசன்கள் இவரை #ஐந்து_கட்சி_அமாவாசை என ட்ரெண்ட் செய்து புகழ்ந்து வருகின்றனர்.

கரூர் தாந்தோன்றிமலை பெருமாள்தான் செந்தில்பாலாஜியின் குலதெய்வம். சனிக்கிழமை தவறாமல் பெருமாளை வணங்கும் செந்தில் பாலாஜி அதன் காரணமாகவே  'வி.செந்தில்குமார்’ என்ற இயற்பெயரை 'வி.செந்தில்பாலாஜி’ என மாற்றிக்கொண்டார். கட்சி மட்டுமல்ல தன் பெயரையே மாற்றியவர் இந்த கலியுக அரசியல்வாதி.

பெயரை மட்டுமல்லாது தனது படிப்பையே மாற்றி ஆவணங்களில் காண்பித்து தன் அரசியல் வாழ்வில் நுழைந்தவர். பி.காம் படித்ததாக கூறும் இவர் அந்த படிப்பை முழுதாக படிக்காமல் படிப்பு ஏறாத காரணத்தினால்  தன் போக்கை அரசியல் பக்கம் திருப்பியவர். ஆனார் தான் பி.காம் படித்ததாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவையே நம்ப வைத்தவர் இவர். பின் தன் குட்டு உடைந்து படிப்பை பாதியில் விட்டதாக ஒப்புகொண்டார். 

பின்னர் அரசியலில் தகிடுதத்தங்கள் செய்து அதனை ஒவ்வொரு கட்சியும் கண்டு நடவடிக்கை எடுக்கும் முன்பு ஜாக்கிரதையாக வேறு கட்சிக்கு மாறியிருப்பார். இப்படி அரசியலில் உழைத்து பிழைக்காமல் ஏய்த்து பிழைத்த செந்தில் பாலாஜி'க்கு கண்டிப்பாக மோடி'யை பிடிக்காதுதான் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

பெயரில் பொய், படிப்பில் பொய், பிழைக்கும் அரசியல் கட்சிகளை நம்ப வைத்து பின் அதே கட்சி பெயரை வைத்து கோடிகளில் ஊழல் செய்து பணத்தை சுருட்டி அடுத்த கட்சிக்கு தாவும் இந்த #ஐந்து_கட்சி_அமாவாசை க்கு ஒரே கட்சியில் உழைத்து முதல்வர் பின் பிரதமர் என உயர்ந்து நின்று இன்று திருடுவது தப்பு என கூறும் பாரத பிரதமர் நரேந்திர மோடியை எப்படி பிடிக்கும்?

Similar News