உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க. எப்படி செயல்படும்.. பிரேமலதா விஜயகாந்த் பேட்டி.!

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்டவைகளின் விலை உயர்ந்துவிட்டது. மின் கட்டணம் உயர்வால் பொதுமக்களின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகிவிட்டது.

Update: 2021-07-02 06:22 GMT

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது: பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்டவைகளின் விலை உயர்ந்துவிட்டது. மின் கட்டணம் உயர்வால் பொதுமக்களின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகிவிட்டது.




 


எனவே இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் வருகின்ற ஜூலை 5ம் தேதி தேமுதிக சார்பில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. மேலும், அரசியலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம். வெற்றியை கண்டு ஆணவப்படுவதோ அல்லது தோல்வியை கண்டு துவண்டு போவதும் இல்லை.




 


அடுத்தக்கட்டத்திற்கு கட்சியை கொண்டுசெல்வதற்கு நிறைய வேலைகளை செய்து வருகிறோம். அது மட்டுமின்றி உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. தேதி அறிவித்த பின்னர் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு எங்களின் நிலையை தெரிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Similar News