மத்திய அரசின் திட்டங்களை 'லேபிள்' ஒட்டி மாநில பட்ஜெட்'டில் அறிவித்த நிதியமைச்சர் பி.டி.ஆர் !

இந்த நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு திட்டங்களை மாநில அரசின் திட்டங்களாக 'லேபிள்' ஒட்டி அறிவித்தார்.

Update: 2021-08-13 09:45 GMT

மத்திய அரசின் திட்டங்களுக்கு 'லேபிள்' ஒட்டி அதனை மாநில அரசு திட்டங்களாக மாற்றி காண்பித்து பட்ஜெட்'டை தாக்கல் செய்த அதிகம் படித்த தமிழக நிதியமைச்சர்.

இன்று தமிழக சட்டமன்றத்தில் தி.மு.க அரசு அமைந்து முதல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இந்த நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு திட்டங்களை மாநில அரசின் திட்டங்களாக 'லேபிள்' ஒட்டி அறிவித்தார்.

அதன்படி இன்றைய தமிழக நிதியமைச்சரின் அறிவிப்பில்,

- ரூ.2,000 கோடியில் ஜல் ஜீவன் இயக்கம் செயல்படுத்தப்படும்,

- அடுத்த 5 ஆண்டுகளில் 8 லட்சம் குடும்பங்களுக்கு வீடு வழங்குவதை உறுதி செய்வோம்.

- 1,622 கிராம ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை சேவை வழங்கப்படும்; ரூ.400 கோடியில் தூய்மை பாரத இயக்கம் செயல்படுத்தப்படும்.

- தூய்மை பாரத இயக்கம் ரூ.400 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

போன்ற அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த அறிவிப்புகள் ஏற்கனவே மத்திய அரசால் பிரதமரின் வீடு கட்டும் திட்டம், தூய்மை பாரதம் திட்டம், ஜல் ஜீவன் திட்டம் என்ற பெயர்களில்  அமல்படுத்தப்பட்டு நிதி ஒதுக்கி வெற்றிகரமாக செயல்படுத்தப்ப திட்டங்களாகும். ஆனால் இதனை மாநில அரசின் திடடங்களாக மடைமாற்றி 'லேபிள்' ஒட்டி இன்று நிதியமைச்சர் தாக்கல் செய்துள்ளார்.



Source - Asianet NEWS

Tags:    

Similar News