ராஜஸ்தான் உள்ளாட்சி தேர்தல்.. 11 மாவட்ட கவுன்சிலர்.. 1,812 பஞ்சாயத்தை கைப்பற்றிய பாஜக.!

ராஜஸ்தான் உள்ளாட்சி தேர்தல்.. 11 மாவட்ட கவுன்சிலர்.. 1,812 பஞ்சாயத்தை கைப்பற்றிய பாஜக.!

Update: 2020-12-09 19:02 GMT

காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. ஆளும் கட்சியான காங்கிரஸ் பின்னடைவை சந்தித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் பாஜக 2வது இடம் பிடித்து சாதனை படைத்தது. இந்நிலையில், ராஜஸ்தானில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் மொத்தமுள்ள 4,371 வார்டுகளில் 1,835 இடங்களை எதிர்க்கட்சியான பாஜக கைப்பற்றியது.

காங்கிரஸ் 1,718 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. சுயேட்சைகள் 422 இடங்களில் வென்றுள்ளது. அதே போன்று 21 மாவட்ட ஊராட்சிகளில் 11 மாவட்ட ஊராட்சிகள் பாஜகவுக்கு கிடைத்துள்ளன.

காங்கிரசுக்கு 5 மாவட்ட ஊராட்சிகள் மட்டுமே கிடைத்துள்ளன. ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பாஜக அதிக இடங்களை கைப்பற்றியதால் நாடு முழுவதும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
 

Similar News